தமிழ்நாடு செய்திகள்

பா.ம.க.வில் ஏற்பட்ட பிரச்சனைக்கு அன்புமணி மட்டுமே காரணம்- ஜி.கே.மணி குற்றச்சாட்டு

Published On 2025-12-15 10:57 IST   |   Update On 2025-12-15 10:57:00 IST
  • அன்புமணிக்கு நான் ஒரு போதும் துரோகம் செய்யவில்லை.
  • அன்புமணிக்கு தேர்தலில் சீட் அளிக்க வேண்டும் என பேசியது நான் தான்.

சென்னை:

பா.ம.க.வில் ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணம் அன்புமணி மட்டுமே என செய்தியாளர்கள் சந்திப்பில் ஜி.கே. மணி குற்றம்சாட்டினார். மேலும் அவர், அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

ஜி.கே.மணி கூறியதாவது:-

* அன்புமணியை இளம் வயதில் மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்தவர் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்.

* அன்புமணி மத்திய அமைச்சராக கூடாது என உறுதியாக இருந்தவர் ஜெ.குரு.

* அன்புமணியின் செயல்பாடுகளால் கண்ணீர் வடித்தார் ராமதாஸ்.

* ராமதாஸ் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அன்புமணி பேசியிருக்கிறார். அன்புமணி மனசாட்சியோடு பேச வேண்டும்.

* அன்புமணியால் பா.ம.க.வுக்கு ஏற்பட்ட சோதனை, நெருக்கடி சொல்லி மாளாது.

* என் அப்பாவுக்கு அடுத்ததாக உங்களை நினைக்கிறேன் என கூறியவர் அன்புமணி.

* பா.ம.க.வில் ஏற்பட்டுள்ள பிளவிற்கு நான் காரணம் என பேசியிருக்கிறார் அன்புமணி.

* பா.ம.க.வில் ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணம் அன்புமணி மட்டுமே.

* மனதளவில் கூட துரோகம் நினைக்காத என்னை துரோகி என்று அன்புமணி பேசுகிறார். இது மிகவும் வருத்தமாக உள்ளது.

* அன்புமணிக்கு நான் ஒரு போதும் துரோகம் செய்யவில்லை.

* அன்புமணிக்கு தேர்தலில் சீட் அளிக்க வேண்டும் என பேசியது நான் தான்.

* அன்புமணியை மத்திய அமைச்சராக வேண்டும் என ராமதாசிடம் பேசினேன்.

* மாவட்டந்தோறும் அன்புமணியை அழைத்து சென்று அறிமுகப்படுத்தினேன்.

* தந்தையையும், மகனையும் பிரித்து விட்டதாக மனசாட்சி இல்லாமல் அன்புமணி பேசுகிறார்.

இவ்வாறு ஜி.கே.மணி பேசினார். 

Tags:    

Similar News