தமிழ்நாடு செய்திகள்
null

TN Assembly Election | தமிழகத்திற்கு ஒரேகட்டமாக ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு

Published On 2026-03-15 16:28 IST   |   Update On 2026-03-15 16:45:00 IST
  • தமிழகத்தில் தற்போதைய 16-வது சட்டசபையின் பதவிக்காலம் மே 10-ந்தேதி முடிவடைகிறது.
  • புதுச்சேரி சட்டசபையின் பதவிக்காலம் ஜூன் மாதம் 15-ந்தேதி முடிவடைிகிறது.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களிலும் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தற்போதைய 16-வது சட்டசபையின் பதவிக்காலம் மே 10-ந்தேதி முடிவடைகிறது. புதுச்சேரி சட்டசபையின் பதவிக்காலம் ஜூன் மாதம் 15-ந்தேதியும், மேற்கு வங்காள மாநில சட்டசபையின் பதவிக்காலம் மே 7-ந்தேதியும், அசாம் மாநில சட்டசபை மே 20-ந்தேதியும், கேரள சட்டசபை மே 23-ந்தேதியும் நிறைவு பெறுகிறது.

இந்த 5 மாநிலங்களிலும் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் தேர்தலை நடத்தி முடித்திட இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக பணியாற்றி வருகிறது.

5 மாநிலங்களிலும் சட்டசபை தேர்தலை நடத்துவதற்கான அனைத்து பணிகளும் முடிந்துள்ளதால் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்பாக டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் பத்திரிகையாளர் சந்திப்புக்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

டெல்லியில் இந்திய தேர்தல் தலைமைத்தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்.

அதன்படி, தமிழகத்திற்கு வரும் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, மே 4ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் 140 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகிறது.

126 தொகுதிகள் கொண்ட அசாமில் ஒரே கட்டமாக ஏப்ரல் 9ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவு அறிக்கப்படுகிறது.

மேற்குவங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, மேற்குவங்கத்தில் ஏப்ரல் 23ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவும், ஏப்ரல் 29ம் தேதி 2ம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படுகிறது.

Tags:    

Similar News