தமிழ்நாடு செய்திகள்

TVK | சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. முதலிடமா? அது கருத்துக்கணிப்பு இல்லை, கருத்து திணிப்பு!- அமைச்சர் பெரியசாமி

Published On 2026-03-15 14:17 IST   |   Update On 2026-03-15 14:17:00 IST
  • சி.பி.ஐ. விசாரணை என்ற பெயரில் த.வெ.க. தலைவர் விஜய்க்கு அழுத்தும் கொடுத்து கொள்ளைப்புறம் வழியாக தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க நினைக்கின்றனர்.
  • நம் முதலமைச்சர் நேர்மையான முறையில் உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் தமிழகத்திற்காக போராடி வருகிறார்.

திண்டுக்கல்:

திண்டுக்கல்லில் மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் கலந்துகொண்ட அமைச்சர் பெரியசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

கியாஸ் தட்டுப்பாட்டுக்கு மோடி அரசுதான் முழு பொறுப்பு ஏற்கவேண்டும். வெளியுறவு கொள்கையில் தோற்றுவிட்டனர். வருகின்ற சட்டமன்ற தேர்தல் மற்றும் 2029 பாராளுமன்ற தேர்தலிலும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி படு தோல்வி அடையும். சி.பி.ஐ. விசாரணை என்ற பெயரில் த.வெ.க. தலைவர் விஜய்க்கு அழுத்தும் கொடுத்து கொள்ளைப்புறம் வழியாக தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க நினைக்கின்றனர். ஆனால் நம் முதலமைச்சர் நேர்மையான முறையில் உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் தமிழகத்திற்காக போராடி வருகிறார். பீகாரில் 10 முறை முதல்வராக இருந்த நிதீஸ்குமாரை வீட்டிற்கு அனுப்பி விட்டனர். அதேபோல் தமிழகத்திலும் முயற்சி செய்கின்றனர். கூடுதல் சீட் கேட்பது கூட்டணி கட்சிகளின் உரிமை இதுகுறித்து முதலமைச்சர் முடிவு செய்வார்.

கருத்துக் கணிப்பில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. முதல் இடத்திலும், தி.மு.க. 2ம் இடத்திலும் இருப்பதாக கூறுவது பொய். இது கருத்துக்கணிப்பு இல்லை. கருத்து திணிப்பு என்றார். 

Tags:    

Similar News