தமிழ்நாடு செய்திகள்
ADMK | NDA கூட்டணி கட்சிகளுடன் பேச தொகுதிப் பங்கீட்டு குழுவை அமைத்தது அ.தி.மு.க
- 7 பேர் அடங்கிய செய்தியாளர்களை சந்திக்கும் குழுவை எடப்பாடி பழனிசாமி.
- 4 பேர் கொண்ட குழுவை அமைத்தார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக ஆட்சி மன்றக்குழுவை திருத்தியமைத்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
5 பேர் அடங்கிய அதிமுக சட்டக்குழு, 7 பேர் அடங்கிய செய்தியாளர்களை சந்திக்கும் குழுவையும் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இந்நிலையில், என்டிஏ கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த 4 பேர் கொண்ட குழுவை அமைத்தார் எடப்பாடி பழனிசாமி.
முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி மற்றும் வளர்மதி ஆகியோர் அடங்கிய தொகுதி பங்கீட்டு குழுவில் இடம் பிடித்துள்ளனர்.