தமிழ்நாடு செய்திகள்

Flying Squad | கையில் அதிக பணம் கொண்டுசெல்லாதீர்! தேர்தல் பறக்கும் படை பிடித்துவிடும்!

Published On 2026-03-15 21:57 IST   |   Update On 2026-03-15 21:57:00 IST
  • பொதுமக்கள் கையில் அதிக பணம் எடுத்துச்செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும்
  • 50 ஆயிரம் ரூபாய் கொண்டுசெல்ல எந்த ஆவணமும் தேவையில்லை

தமிழகம், புதுவை, கேரளா, அசாம் மற்றும் மேற்குவங்கத்தில் சட்டப்பேரவை  தேர்தல் தேதிகள் இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து, தேர்தல் பறக்கும் படையினர் தீவிர பணியில் ஈடுபட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் கையில் அதிக பணம் எடுத்துச்செல்லும்போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவ்வாறு இல்லை என்றால் தேர்தல் பறக்கும் படையினர், பணத்தை பறிமுதல் செய்து வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவித்துவிடுவர். 

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதி அமல்!

தமிழகத்தில் தேர்தல் நடைபெற்று முடியும்வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும். தேர்தலை அமைதியாக நடத்தவே இந்த விதிமுறைகள் அமல்படுத்தப்படுகின்றன. தேர்தல் விதிமுறைகளை கண்காணிக்க காவல்துறையினருடன், அரசு அதிகாரிகளும் பறக்கும் படையாக பணியாற்றுவார்கள். 

கையில் நிறைய பணம் வேண்டாம்

தேர்தலில் முறைகேடுகள் நடைபெறாமல் இருக்கவும், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்கவும் பறக்கும் படையினர் தொடர் சோதனையில் ஈடுபடுவர். எனவே, தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடியும்வரை அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் கண்டிப்பாக கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக பண விஷயத்தில் அனைவருக்கும் ஒரே விதிமுறைதான்.

அதிகபட்சம் ரூ. 50 ஆயிரம்!

மக்கள் தங்கள் கையில் அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் வரை கொண்டு செல்லலாம். 50 ஆயிரம் ரூபாய் கொண்டு செல்ல எந்த ஆவணமும் தேவையில்லை. அதற்கு மேல் பணம் கொண்டு செல்ல, நிச்சயம் உரிய ஆவணங்கள் கையில் இருக்க வேண்டும். இல்லையென்றால் நம் பணம் பறிமுதல் செய்யடும்.

சிக்கினால் வருமான வரித்துறை தான்!

ஒருவர் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் கொண்டு சென்றீர்கள் என்றால் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உடனடியாக வருமான வரித்துறைக்கு தகவல் அளிக்கப்படும். வருமான வரித்துறையினர் விசாரணை நடத்துவர்.

அதேபோல் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பரிசு பொருட்கள் எடுத்து செல்லும்போதும் அதற்கு உண்டான ஆவணங்கள் கட்டாயம் கையில் இருக்க வேண்டும். 

Tags:    

Similar News