உள்ளூர் செய்திகள்
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.

சங்கரன்கோவிலில் ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2022-01-22 09:13 GMT
சங்கரன்கோவில் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தமிழகம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். 

பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட வேண்டும். மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக வழங்கும் ஊதியத்தை இடைநிலை ஆசிரியருக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவர்கள் கோமதி, மீனாட்சிசுந்தரம் ஆகியோர் தலைமை தாங்கினர். பொதுக்குழு உறுப்பினர்கள் மரிய அந்தோணி, வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

நகர செயலாளர் முருகேசன் வரவேற்புரை ஆற்றினார். சங்க நிர்வாகிகள் பால்ராஜ், மாணிக்கம், சுப்பிரமணியன், செல்வம், கணேசன், முனீஸ்வரன், மணிமேகலை ஆகியோர் கோரிக்கை குறித்து விளக்க உரை ஆற்றினார்கள். 

இதில் ஏராளமான பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார பொருளாளர் ஹெலன் மேரி கிறிஸ்டி பாய் நன்றி கூறினார்.
Tags:    

Similar News