search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tenkasi"

    • கேக் கெட்டு போனதை பார்த்து குழந்தைகளின் தாய் அதிர்ச்சி.
    • குழந்தைகளை பாவூர்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

    தென்காசியை அடுத்த பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவநாடானூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவருக்கு ஸ்ரீரச்சனா மற்றும் நிஷா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். முதல் குழுந்தையின் பிறந்தநாளை ஒட்டி, பாவூர்சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள அய்யங்கார் பேக்கரியில் கேக் வாங்கி கொடுத்து, பிறகு அங்கிருந்து சென்னை திரும்பியுள்ளார்.

    பிறந்தநாள் கொண்டாடுவதற்காக கேக்கை வெட்டிய குழந்தைகள், அதனை சாப்பிட்டனர். சிறிது நேரத்தில் கேக் கெட்டு போய் இருந்ததை பார்த்து குழந்தைகளின் தாய் அதிர்ச்சி அடைந்தார். கேக் சாப்பிட்ட சிறிது நேரத்தில், குழந்தைக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டது. உடனே குழந்தைகளை பாவூர்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

    கேக் கெட்டு போன விஷயம் தொடர்பாக குழந்தைகளின் தந்தை பேக்கரியை தொடர்பு கொண்ட பேசியுள்ளார். இதற்கு பதில் அளித்த பேக்கரி நிறுவனம், இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் நடந்தேரிய தவறுக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுப்பதாக தெரிவித்து இருக்கிறது. எனினும், இதை ஏற்க மறுத்த குழந்தைகளின் தந்தை பேக்கரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

    இது தொடர்பாக தந்தை அளித்த புகாரின் கீழ் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பேக்கரியில் சோதனை நடத்தினர். சோதனையில் சுமார் 50 கிலோ கெட்டுப் போன இனிப்பு மற்றும் தின்பண்டங்களை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் பேக்கரிக்கு அபராதமும், நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

    • அரசு தொடக்கப்பள்ளியில் நேற்று Good Touch Bad Touch குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • அப்போது 4 சிறுமிகள், தலைமை ஆசிரியரிடம் சென்று, வீட்டின் அருகே விளையாடும் போது, ஒருவர் Bad Touch செய்ததாக கூறியுள்ளனர்.

    தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் காட்டுராஜா என்பவர் தனது வீட்டின் அருகே விளையாடும் 9 வயது சிறுமிகள் 3 பேர் மற்றும் 8 வயது சிறுமி ஆகியோருக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து, அவரது வீட்டின் உள்ளே அழைத்துச் சென்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளதை அடுத்து போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    புளியங்குடியில் உள்ள ஒரு அரசு தொடக்கப்பள்ளியில் நேற்று Good Touch Bad Touch குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதில் தலைமை ஆசிரியர், பள்ளி குழந்தைகளிடம் உங்களது உடலில் உங்களது வீட்டு நபர்களை தவிர யாராவது உங்கள் உடலில் கை வைத்தால் பள்ளியிலோ, அல்லது வீட்டில் உள்ள பெற்றோர்களிடமோ உடனே தகவல் சொல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    அப்போது 4 சிறுமிகள், தலைமை ஆசிரியரிடம் சென்று, வீட்டின் அருகே விளையாடும் போது, ஒருவர் Bad Touch செய்ததாக கூறியுள்ளனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோரிடம் பள்ளியின் தலைமை ஆசிரியர் தகவல் கூறியுள்ளார். பின்னர் இதுகுறித்து நான்கு குழந்தைகளின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் டாஸ்மாக் ஊழியரான காட்டு ராஜாவை (48) போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • தென்காசி மாவட்டத்தில் சாலை விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
    • உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார் முதலமைச்சர்.

    தென்காசி மாவட்டம், சொக்கம்பட்டி கிராமம், மஜரா புன்னையாபுரம் அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதனைத்தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதியுதவி அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "6 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள் என்ற துயரகரமான செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • பாபநாசம் அணைக்கு வரும் நீரின் அளவு 883 கனஅடியாக அதிகரித்தது.
    • மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள குற்றாலம் அருவி பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று காலையில் தொடங்கி இரவு வரையிலும் ஒரு சில இடங்களில் மழை பெய்தது.

    நெல்லையில் நேற்று மாலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்தது. அங்கு 5 மில்லி மீட்டரும், சேர்வலாறு அணை பகுதியில் 2 மில்லி மீட்டரும் மழை பதிவாகியது.

    இதனால் பாபநாசம் அணைக்கு வரும் நீரின் அளவு 883 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 1,054 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 140.50 அடியாக உள்ளது. கொடுமுடியாறு அணையில் 11 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    118 அடி கொண்ட மணி முத்தாறு அணை பகுதியில் நேற்று 14.50 மில்லிமீட்டர் மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக அணை இந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் 3-வது முறையாக நிரம்பியது.

    தாமிரபரணி ஆற்றில் உபரி நீர் 720 கனஅடி திறக்கப்பட்டுள்ளது. கன்னடியன் கால்வாய் பகுதியில் சாரல்மழை தொடர்ந்து பெய்து வந்தது. அங்கு 8.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. களக்காட்டில் 9.2 மில்லி மீட்டரும், சேரன்மகாதேவியில் 4 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

    மாவட்டத்தில் நாங்குநேரி, அம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று பரவலாக மழை பெய்தது. நாங்குநேரியில் அதிகபட்சமாக 12 மில்லி மீட்டரும், அம்பையில் 6 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. ராதாபுரத்தில் 3 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. ஊத்து, நாலுமுக்கு, மாஞ்சோலை, காக்காச்சி உள்ளிட்ட எஸ்டேட்டுகளிலும் தொடர்ந்து 2-வது நாளாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக ஊத்து பகுதியில் 12 மில்லி மீட்டரும், நாலுமுக்கில் 8 மில்லி மீட்டரும், மாஞ்சோலையில் 7 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் ராமநதி, கடனா நதி மற்றும் குண்டாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை நீடிக்கிறது. அதிகபட்சமாக கடனா நதியில் 7 மில்லி மீட்டரும், ராமநதியில் 6 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. குண்டாறு அணை தனது முழு கொள்ளளவான 36 அடியை அடைந்து நிரம்பி வழிந்த வண்ணம் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள குற்றாலம் அருவி பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    இன்று விடுமுறை தினத்தையொட்டி மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து குளித்து மகிழ்ந்து வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் தென்காசி மற்றும் சிவகிரியில் லேசான சாரல் அடித்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகரன் பட்டினம், சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தலா 13 மில்லிமீட்டர் மழை பெய்து உள்ளது. அதிகபட்சமாக காயல்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 23 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. திருச்செந்தூரில் 1 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    • தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
    • நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

    அதிகனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி இருப்பதால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    • மாவட்டம் முழுவதும் 226 கடைகளில் உணவுபாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து 152 போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
    • இதில், ஒரே நாளில் 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விற்பனையில் ஈடுபட்ட 18 பேர் கைது செய்யப்பட்டனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் சட்ட விரோதமாக குட்கா விற்பனையை தடுக்கும் பொருட்டு தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள 29 போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அனைத்து கடைகளிலும் போலீசார் சோதனை நடத்தினர்.

    குறிப்பாக பல்வேறு பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகே அமைந்துள்ள கடைகளில் குட்கா விற்பனை செய்யப்படுகின்றதா? என மாவட்டம் முழுவதும் 226 கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து 152 போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    இதில் பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகே உள்ள கடைகள் உட்பட பல்வேறு கடைகளில் சட்ட விரோதமாக குட்கா விற்பனை செய்ததாக ஒரே நாளில் 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விற்பனையில் ஈடுபட்ட 18 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டி ருந்த சுமார் 8 கிலோ மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டு உணவு பாதுகாப்பு அதிகாரி கள் மூலமாக கடைகள் சீல் வைப்பதற்கான நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

    • மர்ம நபர் ஒருவர் மாரீஸ்வரியின் மணிபர்சை பிக்பாக்கெட் அடித்துச் சென்றார்.
    • சக பயணிகளின் உதவியுடன் அந்த நபரை பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

    நெல்லை:

    சிவகிரியை சேர்ந்தவர் மாரீஸ்வரி. இவர் நேற்று முன்தினம் தென்காசியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவரும் தனது உறவினரை பார்ப்பதற்காக பஸ்சில் வந்துள்ளார். அவர் தென்காசி புதிய பஸ் நிலையத்தில் இறங்கி நின்றபோது, மர்ம நபர் ஒருவர் அவரிடம் இருந்து மணிபர்சை பிக்பாக்கெட் அடித்துச் சென்றார்.

    இந்நிலையில் நேற்று மாரீஸ்வரி தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் மீண்டும் தென்காசி புதிய பஸ் நிலையத்திற்குள் வந்தபோது, பிக்பாக்கெட் அடித்த அதே நபர் கேரளா பஸ்கள் நிற்கும் பகுதியில் சுற்றித்திரிந்துள்ளார். அதனை பார்த்த மாரீஸ்வரி, தனது கணவரிடம் தெரிவித்தார். உடனே அவர் அங்கிருந்த சக பயணிகளின் உதவியுடன் அந்த நபரை பிடித்து தென்காசி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் கடலூர் சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த பாஸ்கர்(வயது 46) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மணிபர்சை மீட்டு மாரீஸ்வரியிடம் ஒப்படைத்தனர்.

    • மாணவர்களுக்கு வகுப்பு வாரியாக விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
    • வெற்றி பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அடுத்துள்ள ஆவுடையானுர் பஞ்சாயத்து பொடியனூரில் உள்ள சிவசக்தி வித்யாலயா சி.பி.எஸ்.இ. சீனியர் செகண்டரி பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு அனைத்து மாணவர்களுக்கும் பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் வகுப்பு வாரியாக நடத்தப்பட்டது.

    முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு வேடத்தில் மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் விழாவை முன்னிட்டு மாணவர்கள் அனைவரும் வண்ண வண்ண உடையில் பள்ளிக்கு வருகை தந்திருந்தனர். பள்ளி ஆசிரியைகள் அனைவரும் மாணவர்களுக்காக கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

    மாணவர்கள் அனைவரும் விளையாட்டு போட்டிகளில் பங்கு கொண்டு தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தினர். மாணவர்கள் பல்வேறு விளையாட்டுகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். அவர்களை ஊக்குவிக்கும் வகையில் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் நித்யா தினகரன். ஆசிரியைகள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • மாப்பிள்ளையூரணி பகுதியை சேர்ந்த சண்முகவேல் தனது காரில் கேரளாவில் உள்ள தனது உறவினரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஊர் திரும்பி வந்து கொண்டிருந்தார்.
    • அப்போது பாவூர்சத்திரம் கே.டி.சி. நகர் அருகே வந்து கொண்டிருந்தபோது சக்திவேலின் மோட்டார் சைக்கிள் மீது அதிவேகமாக மோதி தூக்கி வீசியது.

    தென்காசி:

    நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலையில் பாவூர்சத்திரம் அருகே கே.டி.சி. நகர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பெட்ரோல் பங்க் அருகே செட்டியூர் கிராமத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவரான சக்திவேல் என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் நிரப்புவதற்காக நண்பருடன் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அங்குள்ள சாலையில் திரும்பும்போது தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி பகுதியை சேர்ந்த சண்முகவேல் என்பவர் தனது காரில் கேரளாவில் உள்ள தனது உறவினரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஊர் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    அப்போது பாவூர்சத்திரம் கே.டி.சி. நகர் அருகே வந்து கொண்டிருந்தபோது சக்திவேலின் மோட்டார் சைக்கிள் மீது அதிவேகமாக மோதி தூக்கி வீசியது. இதில் சக்திவேல் கால் முறிந்து பலத்த காயத்துக்குள்ளானார். மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்த அவரது நண்பர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

    சக்திவேலை அங்கிருந்த நபர்கள் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய பதை பதைக்க வைக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மேற்கூரை இடிந்து விழுந்ததில் மாரியப்பன் காயமடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு சென்று மாரியப்பனை நேரில் பார்த்து ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் அருகே மேலக்கடையநல்லூா் கடகாலீஸ்வரா் கோவில் தெருவை சோ்ந்தவா் மாரியப்பன் (வயது42). கூலித் தொழிலாளி. கடந்த 5-ந்தேதி இரவு இவா் வீட்டினுள்ளும், குடும்பத்தினா் வெளிப்புறத் திண்ணையிலும் தூங்கினார்கள் . அப்போது இரவு பெய்த பலத்த மழையால், இவரது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மாரியப்பன் காயமடைந்தாா்.

    அவரை கடையநல்லூர் தீயணைப்பு-மீட்புப் பணிகள் துறை வீரா்கள் சென்று, இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட மாரியப்பனை மீட்டு கடையநல்லூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தற்போது மருத்துவமனையில் மாரியப்பன் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து கடையநல்லூர் எம்.எல்.ஏ. கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு சென்று மாரியப்பனை நேரில் பார்த்து ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார்.

    அதனைத்தொடர்ந்து மழைக்காலம் என்பதால் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அதிக அளவு அனுமதிக்கப்பட்டி ருந்த குழந்தைகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

    அதனைத்தொடர்ந்து அரசு மருத்துவமனை மருத்துவர் பிஸ்மி நிசாவிடம் அதிக அளவு குழந்தைகளை தாக்கும் வைரஸ் காய்ச்சல் மற்றும் குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகளை குறித்து கேட்டறிந்து குழந்தைகளுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க வேண்டு என கேட்டுக் கொண்டார். அப்போது மாவட்ட துணை செயலாளர் பொய்கை மாரியப்பன், கடையநல்லூர் நகர செயலாளர் எம்.கே. முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • புதிய சாலை அமைக்கும் பணி முடிவுற்ற நிலையில் புதிய சாலையை திறக்கும் நிகழ்வு நடைபெற்றது.
    • தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் வன்னிக்கோேனந்தல் தம்பிராட்டி அம்மன் கோவில் தெருவில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சம் செலவில் புதிய சாலை அமைக்கும் பணி முடிவுற்ற நிலையில் புதிய சாலையை திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. மானூர் ஒன்றிய தலைவர் ஸ்ரீலேகா செல்வி அன்பழகன், ஒன்றிய ஆணையாளர் மணி ஆகியோர் தலைமை தாங்கினர். மேலநீலித நல்லூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் வெற்றி விஜயன், மானூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். ஒன்றிய துணைத் தலைவர் கலைச்செல்வி, வன்னிக்கோேனந்தல் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணன், பஞ்சாயத்து துணைத் தலைவர் வள்ளிநாயகம், ஒன்றிய கவுன்சிலர் மல்லிகா முருகன், தகவல் தொழில் நுட்ப அணி தொகுதி பொறுப்பாளர் வீமராஜ், ஒன்றிய அவைத் தலைவர் நடராஜன், கூவாச்சிபட்டி செல்வம், காங்கிரஸ் கணேசன், முகமது அலி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • பாட்டாக்குறிச்சி கிராமத்தில் கலெக்டர் ரவிச்சந்திரன் விளையாட்டு வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
    • நிகழ்ச்சியில் தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் தென்காசி மாவட்டம் பாட்டாக்குறிச்சி கிராமத்தில் ரூ15 கோடி மதிப்பீட்டில் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், தென்காசி எம்.எல்.ஏ. எஸ். பழனிநாடார் முன்னிலையில் மாவட்ட விளையாட்டு வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

    நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தமிழ்செல்வி,மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் உதய கிருஷ்ணன், தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயரத்தின ராஜன், முன்னாள் மாவட்ட விளையாட்டு அலுவலர் வினு, உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராம சுப்பிரமணியன் மற்றும் பாட்டாக்குறிச்சி கிராம ஊரா ட்சி தலைவர் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

    ×