என் மலர்

  நீங்கள் தேடியது "demonstration"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நுகர்பொருள் வாணிபக்கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  • ஆர்ப்பாட்டத்தில் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு நிலுவை தொகை மற்றும் கூலி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

  திருச்சி,

  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் உள்ள காலிப்பிணிடங்களை உடனே நிரப்ப வேண்டும். நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் அயல்துறை அதிகாரிகளை மண்டல மேலாளராக நியமனம் செய்வதை ரத்து செய்ய வேண்டும்.

  சுமைப்பணி தொழிலாளர்களை அவுட்சோர்சிங் முறையில் நியமனம் செய்வதை ரத்து செய்ய வேண்டும். சுமைப்பணி தொழிலாளர்களுக்கு நிலுவை தொகை மற்றும் கூலி உயர்வு வழங்க வேண்டும்.

  இன்டேண் எரிவாயு பிரிவில் பணிபுரிய கூடிய சிலிண்டர் சப்ளை செய்யும் பணியாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட மாநில மாநாட்டு தீர்மானங்களை விளக்கி சி.ஐ.டி.யூ. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக பொதுத்தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.

  ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மண்டல தலைவர் வேலு தலைமை தாங்கினார். சங்க மாநில பொருளாளர் ஏழுமலை, மாநில செயலாளர் ராசப்பன், சி.ஐ.டி.யூ. மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், மாவட்ட தலைவர் சீனிவாசன், மாவட்ட துணைத்தலைவர் சிவக்குமார் ஆகியோர் பேசினர்.

  இதில் சங்க நிர்வாகிகள் அய்யப்பன், கருணாகரன், ஐயப்பன், வடிவேல், சரவணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மண்டல பொருளாளர் சின்னையன் நன்றி கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  • 12 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தி நடந்தது

  பெரம்பலூர்:

  எல்.ஐ.சி. முகவர்கள், பாலிசிக்கான போனசை உர்த்தி வழங்க வேண்டும். பாலிசி கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும். பணிக்கொடையை ரூ.20 லட்சமாக உயர்த்த வேண்டும். மருத்துவ காப்பீடு அனைத்து முகவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். முகவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தி பெரம்பலூரில் வெங்கடேசபுரத்தில் அமைந்துள்ள எல்ஐசி அலுவலகம் வளாகத்தில் நடை பெற்ற போராட்டத்தில் மாவட்ட தலைவர் சுத்தாங்காத்து தலைமையில் 50க்கு மேற்பட்டோர் கருப்பு பேட்ச் அணிந்து பங்கேற்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இந்து முன்னணி சார்பில் நடந்தது
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

  குடியாத்தம்:

  வேலூர் மாவட்டம் குடியாத்தம் இந்து முன்னணி சார்பில் குடியாத்தம் பழைய பஸ் நிலையம் அருகே இந்துக்களையும், இந்து தெய்வங்களையும் அவதூறாக பேசி இழிவு படுத்தி வரும் திமுக துணை பொதுச்செயலாளரும், நீலகிரி பாராளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசாவை கைது செய்து அவரது பதவியை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் டி.கே.தரணி தலைமை தாங்கினார். இந்து வழக்கறிஞர் முன்னணி மாநில செயலாளர் வி. ரத்தினகுமார் கண்டன உரையாற்றினார்.

  இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சோமசுந்தரம், வக்கீல் சந்திரமவுலி, ஹரிஷ், மணிகண்டன், இந்து அன்னையர் முன்னணி பொறுப்பாளர் செல்வி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு ஆர் ராசா எம்பிக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அம்பாசமுத்திரம் பாரத் ஸ்டேட் வங்கி எதிரில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  • நகர மகளிரணி தலைவி சுமதி உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினர்.

  கல்லிடைக்குறிச்சி:

  இந்துக்கள் பற்றி தி.மு.க. எம்.பி. ஆ.ராசா அவதூறாக பேசியதாக கூறி அவரை கண்டித்து அம்பாசமுத்திரம் பாரத் ஸ்டேட் வங்கி எதிரில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பா.ஜ.க. நகரத் தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் ராம்ராஜ் பாண்டியன் முன்னிலை வகித்தார். ஊரக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில துணைத்தலைவர் லெட்சுமண ராஜா, வீகேபுரம் நகர தலைவர் தங்கேஸ்வரன், நகர பிரபாகரி பால்பாண்டி, அம்பை ஒன்றிய தலைவர் சண்முக பிரகாஷ், சேரை மேற்கு ஒன்றிய தலைவர் ராஜேந்திர பிரசாத், சேரை கிழக்கு ஒன்றிய தலைவர் சின்ன முருகன், அம்பை நகர பொதுச்செயலாளர்கள் சுகுமாரன், சுதன், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் சிவராமகிருஷ்ணன், மகளிரணி பொதுச்செயலாளர் செல்வி சுப்பிரமணியன்,நகர துணைத்தலைவர்கள் செல்வராஜ், வன்னியப்பன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட துணைத்தலைவர் உதயகுமார், நகர மகளிரணி தலைவி சுமதி, நகர இளைஞரணி தலைவர் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • மாநில செயற்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நூர்முகமது ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

  தூத்துக்குடி:

  தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல பகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி புறநகர் குழு சார்பில் முத்தையாபுரம் பல்க் பஜார் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  புறநகர் குழு உறுப்பினர் பூராடன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நூர்முகமது ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

  சி.பி.எம். மாநில குழு உறுப்பினர் பூமியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பேச்சிமுத்து,புறநகர செயலாளர் ராஜா ஆகியோர் கண்டன உரையாற்றி பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

  மழைக்காலத்திற்கு முன் மழைநீர்,கழிவு நீர் தெருக்களில் தேங்காமல் வெளியேறுவதற்கு முறையான வடிகால் வசதி அமைத்துக் கொடுக்க வேண்டும், சில தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள வடிகால்களில் கழிவுநீர், மழை நீர் தேங்கும் வகையில் உள்ளது அதனை தேங்காமல் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  திறந்தவெளி வடிகாலில் மூடிகள் அமைத்திட வேண்டும்,தெற்கு மண்டல பகுதிகளில் போக்கு வரத்திற்கு தகுதியற்ற தெரு சாலைகளை சீரமைத்திட வேண்டும், உப்பாற்று ஓடையில் இருந்து கோவளம் கடற்கரை வரை மழை நீர் செல்லும் கால்வாய் ஓரங்களில் வெள்ள தடுப்புச்சுவர் அமைத்திட வேண்டும்.

  ஸ்பிக், பல்க், தோப்பு உள்ளிட்ட பேருந்து நிறுத்தங்களில் நிழல் கூடம் அமைத்திட வேண்டும், சுந்தர் நகர்,ஜே.எஸ்.நகர், சவேரியார் புரம், சுனாமி காலனி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சமுதாய நலக்கூடங்களை மக்கள் பயன்படுத்தும் வகையில் செயல்படுத்த வேண்டும், அனைத்து வாடுகளிலும் சமுதாய நலக்கூடங்கள் அமைத்திட வேண்டும்.

  குடிநீர் இணைப்புக்கான டெபாசிட் தொகையை தவணை முறையில் பெற்றிட வேண்டும், குடிநீர் குழாய் பதிப்பதற்கும் சரி செய்வதற்கும் கூடுதலாக பணம் பறிப்பதை கைவிட வேண்டும், புதிதாக வீடு கட்டுவோரிடம் பிளான் அப்ரூவல் என்ற பெயரில் பொது மக்களிடம் கொள்ளை அடிப்பதை கைவிட வேண்டும், உப்பாற்று ஓடையின் வடபுறம் தனி நபர்கள் ஆக்கிரமிப்பை அகற்றி பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பூங்கா மற்றும் நடைமேடை அமைத்து விட வேண்டும்.

  டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலை உண்டாக்கும் கொசுக்களை ஒழித்திட சுகாதார ஊழியர்களை அதிகப்படுத்த வேண்டும், கோவில் பிள்ளை நகரில் இருந்து பைபாஸ் ரோடு வரை ஹைமாஸ் விளக்குகள் அமைத்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

  ஆர்ப்பாட்டத்தில் புறநகர் குழு உறுப்பினர்கள் முருகன், முனியசாமி, டேனியல் ராஜ், சுப்பையா, வன்னியராஜா, சரஸ்வதி, கிளைச் செயலாளர்கள் மகாராஜன், செல்வி, சமுத்திரபாண்டி, சுடலைமணி, வீரபெருமாள், கண்ணன்,மாரியப்பன், கிருஷ்ண பாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இந்துக்களை அவதூறாக பேசியதாக கூறி தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவை கைது செய்ய கோரி தென்காசி மாவட்ட பாரதீய ஜனதா சார்பில் தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • மாவட்ட பொதுச்செயலாளர் பால குருநாதன், பொருளாளர் பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் அன்புராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர்.

  தென்காசி:

  இந்துக்களை அவதூறாக பேசியதாக கூறி தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவை கைது செய்ய கோரி தென்காசி மாவட்ட பாரதீய ஜனதா சார்பில் தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொதுச்செயலாளர் பால குருநாதன், பொருளாளர் பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் அன்புராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர்.

  மாவட்ட துணைத் தலைவர்கள் முத்துக்குமார் முத்துலட்சுமி, பால சீனிவாசன், பால்ராஜ், மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் புலிக்குட்டி, தென்காசி நகரத் தலைவர் மந்திரமூர்த்தி, நகர பொதுச்செயலாளர் யோகா சேகர் ராஜ்குமார், புளியங்குடி நகரத் தலைவர் சண்முகம், கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய தலைவர் மாரியப்பன், தென்காசி வடக்கு ஒன்றிய தலைவர் அய்யப்பன், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தலைவர் சோழராஜன், கடையநல்லூர் நகரத் தலைவர் சுப்பிரமணியன், ஓ.பி.சி. அணி மாரியப்பன், இளைஞரணி தலைவர் முப்பிடாதி, வழக்கறிஞர் பிரிவு கார்த்திகேயன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட னர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சொத்துக்களை, விற்கவோ, அடமானம் வைக்கவோ, தான செட்டில்மெண்ட் எழுதவோ முடியாது என்று அறிவிப்பை வெளியிட்டது.
  • இத்தனை ஆண்டுகள் தான் வசிக்கும் இடங்கள் மதிப்பு இழந்து விட்டதையும் கண்ட அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

  கடலூர்:

  விருத்தாச்சலம் சார் பதிவாளர் அலுவலகம் கடந்த ஜனவரி மாதம் 100-க்கு மேற்பட்ட சர்வே நம்பரில் உள்ள சொத்துக்களை, விற்கவோ, அடமானம் வைக்கவோ, தான செட்டில்மெண்ட் எழுதவோ முடியாது என்று அறிவிப்பை வெளியிட்டது. மேலும் அறிவிப்பு செய்யப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் தமிழக வக்பு வாரியத்திற்கு சொந்தமான சொத்துக்கள் என்றும், யாரும் உரிமை கோர முடியாது எனவும் அறிவிப்பு வெளியிட்டது. சார்பதிவாளர் அலுவலகத்தின் இந்த அறிவிப்பை கண்டு அந்த இடங்களில் வசிக்கும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

  மேலும் இத்தனை ஆண்டுகள் தான் வசிக்கும் இடங்கள் மதிப்பு இழந்து விட்டதையும் கண்ட அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகினர். அரசின் இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று விருத்தாச்சலம் பாலக்கரையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் என சுமார் 200க்கும் மேற்பட்டோர், வக்பு வாரிய பரிந்துரையை புறக்கணிக்க கோரியும், சட்டப்படி கிரையம் பெற்ற சொத்தின் மீதான பரிவர்த்தனை தடையை நீக்க வேண்டும் என தமிழக அரசை கண்டித்தும் கண்டனம் முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு, மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் ராஜூ தலைமை தாங்கினார். வழக்கறிஞர்கள் அம்பேத்கர், சிவாஜி சிங், ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ராமநாதபுரத்தில் அனைத்து ஜமாஅத், இஸ்லாமிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  • பாப்புலர் பிரண்ட் நகர் தலைவர் முஹமது கனி நன்றி கூறினார்.

  ராமநாதபுரம்

  நாடு முழுவதும் சில தினங்களுக்கு முன்பு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ. கட்சி அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் மத்திய அரசின் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனை செய்தனர்.

  இதை கண்டித்து ராமநாதபுரத்தில் அனைத்து ஜமாத் இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஏற்பாட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாப்புலர் பிரண்ட் மாவட்ட தலைவர் செய்யது முகமது இப்ராஹிம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜிக் ரஹ்மான் தொடக்க உரையாற்றினார்.

  மனிதநேய ஜனநாயக கட்சி பாரூக், ஆதி தமிழர் கட்சி பாஸ்கரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர் செயலாளர் சிராஜ்தீன், தமிழர் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் ரஞ்சித், ஐக்கிய ஜமாத் மதுரை மாவட்ட செயலாளர் காஜா மைதீன், பெரியார் பேரவை தலைவர் நாகேசுவரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் முகமது யாசின், ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக பேச்சாளர் ஜாகீர் உசேன், நாம் தமிழர் கட்சி மாநில மாணவர் பாசறை அனீஸ் பாத்திமா, த.மு.மு.க. இஸ்லாமிய பிரசார பேரவை மில்லத் பிர்தவுஸ், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட பொது செயலாளர் அப்துல் ஜமீல், இந்திய தேசிய தவ்ஹீத் ஜமாத் நிர்வாகி செய்யது ஜமாலி ஆகியோர் பேசினர்.

  இதில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜமாத் பிரமுகர்கள், முஸ்லீம் இயக்கங்களின் நிர்வாகிகள், இஸ்லாமிய கூட்டமைப்பு நிர்வாகிகள் உள்பட 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

  பாப்புலர் பிரண்ட் நகர் தலைவர் முஹமது கனி நன்றி கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ராமநாதபுரத்தில் எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  • ராமநாதபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

  ராமநாதபுரம்

  தமிழக முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் நேற்று ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். இந்த சோதனைக்கும், கைது நடவடிக்கைக்கும் எதிர்ப்பு தெரிவித்து ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் நடந்தது.

  ராமநாதபுரம் மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ராமநாதபுரம் மேற்கு மாவட்டத்தலைவர் பரக்க த்துல்லா உள்ளிட்டோரை விடுதலை செய்யக்கோரி ராமநாதபுரம் அரசு பணிமனை முன்பு மாவட்ட துணைத்தலைவர் சோமு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத்தலைவர் அப்துல் ஹமீது கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். பாப்புலர் பிரண்ட் மாவட்ட பேச்சா ளர் ஹமீது இப்ராஹிம், பெரியார் பேரவை தலைவர் நாகேஸ்வரன், தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் ரஞ்சித், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் முஹம்மது யாசின் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.முன்னதாக ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி தலைவர் பீர் முஹைதீன் வரவேற்று ேபசினார். முதுகுளத்தூர் தொகுதி தலைவர் ஆரிபு நன்றி கூறினார். முன்னதாக ராமநாதபுரத்தில் பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சாா்பில் புதிய பஸ் நிலைய நுழைவுவாயில் முன்பு சாலை மறியல் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனா். அப்போது மறியலில் ஈடுபட்டவா்கள் போலீசாருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது.

  அதன் பின்பு மறியலில் ஈடுபட்ட 22 ஆண்கள், 4 பெண்கள் என 26 பேரை போலீசார் கைது செய்தனர். அவர் வெளிப்பட்டினத்தில் உள்ள தனியாா் மஹாலில் தங்க வைக்கப்பட்டனர். ராமநாதபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தேசிய தலைவர் சலாவுதீன் உள்ளிட்ட தேசிய பொறுப்பாளர்கள் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
  • இதனை கண்டித்து இன்று காலை திருச்சி பாலக்கரை பகுதியில் பாப்புலர் பிரண் ட்இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  திருச்சி,

  பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தேசிய தலைவர் சலாவுதீன் உள்ளிட்ட தேசிய பொறுப்பாளர்கள் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். மேலும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் என்.ஐ.ஏ. மற்றும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.

  இதனை கண்டித்து இன்று காலை திருச்சி பாலக்கரை பகுதியில் பாப்புலர் பிரண் ட்இந்தியா அமைப்பினர் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்தபோது திடீரென ஓடிச் சென்று கொளுத்தும் வெயிலில் சாலையில் அமர்ந்தும், படுத்தும் மறியலில் ஈடுபட்டனர்.

  இதனால் ஜங்ஷன் பகுதியில் இருந்து காந்தி மார்க்கெட்டுக்கு சென்ற அனைத்து வாகனங்களும் பாலத்தில் அணிவகுத்து நின்றன. சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

  இதையடுத்து உதவி போலீஸ் கமிஷனர் சுந்தரமூர்த்தி மற்றும் பாலக்கரை இன்ஸ்பெக்டர் நிக்சன் தலைமையிலான போலீசார் போராட்டக்காரர்களை குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர். இதில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மண்டல தலைவர் அமீர் பாஷா, மாவட்ட தலைவர் சபியுல்லா, மாவட்ட செயலாளர் அப்சல் உள்ளிட்ட 30-க்கு மேற்பட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இந்த திடீர் சாலை மறியல் போராட்டம் பாலக்கரை பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தியாகதுருகத்தில் ஊராட்சி செயலாளர்கள் பணி மாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
  • முடிவில் மாவட்ட தலைவர் கொளஞ்சிவேலு நன்றி கூறினார்.

  கள்ளக்குறிச்சி:

  கோயமுத்தூர் மாவட்டத்தில் 84 ஊராட்சி செய லாளர்கள் பணி மாற்றம் செய்யப்பட்டனர். அவ்வாறு பணி மாற்றம் செய்யப்பட்ட ஊராட்சி செயலாளர்களை மீண்டும் ஏற்கனவே பணிசெய்த இடத்திற்குமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் வீரமணி தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் கணேசன், பொருளாளர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  மாவட்ட செயலாளர் சந்திர சேகர், மாவட்ட இணை செயலாளர் தயாபரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திராணி, நிர்வாகி கள் மணிமொழி, லோகேஸ்வரி, அமுதா, பொற்செல்வி, செல்வராஜ், சுதாகர் சீனுவாசன், மாணிக்கம், சங்கீதா, செல்வி வைத்திநாதன், செல்வம், குப்புசாமிஉள்ளிட்ட அலுவலர்கள் பலரும் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட தலைவர் கொளஞ்சிவேலு நன்றி கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print