என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்கள்   கண்டன ஆர்ப்பாட்டம்
    X

    பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

    • பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • வதிஷ்டபுரம் ஊராட்சியில் சாலையை சீரமைக்க கோரி

    பெரம்பலூர்:

    அகரம்சீகூர் அடுத்துள்ள வதிஷ்டபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளகாலிங்கராயநல்லூர் கிராமத்தில் 2- வது வார்டில் உள்ள தெருக்களில் கடந்த இரண்டு தினங்களாக பெய்த கன மழையின் காரணமாக கழிவுநீர் மற்றும் மழை நீர் வெளியே செல்லாமல் தேங்கி நிற்கிறது.

    இது குறித்து இப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் சுத்தம் செய்துதரும்படியும் மழைநீர் தேங்கி நிற்காமல் வெளியேற செய்து தரும்படியும் கோரிக்கை வைத்தனர். மேலும் போர்க்கால அடிப்படையில் உடனடியாக சிமெண்ட் சாலை அமைத்து தரவும் கூறினார்கள்.

    ஆனால் ஊராட்சி நிர்வாகம் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மழை நீர் தெருக்களில் தேங்கி நிற்பதால் டெங்கு, மலேரியா போன்ற நோய்களால் வார்டுகளில் உள்ளவர்கள் பாதிக்கப்படுவார்கள் என அஞ்சி ஆத்திரமடைந்த பொதுமக்கள், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது குறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார் விரைந்து சென்று பொதுமக்களிடம் விரைவில் சாலையை சரி செய்து தருவதாக உறுதி அளித்தன் பெயரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    Next Story
    ×