search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
    X

    ஓய்வூதிய திட்டம், ஆர்ப்பாட்டம், Pension Scheme, Demonstration,

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

    • கலெக்டர் அலுவலகத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • அகில இந்திய மாநில அரசு ஓய்வூதியர் சம்மேளனம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    மதுரை

    அகில இந்திய மாநில அரசு ஓய்வூதியர் சம்மேளனம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட கருவூலம் முன்பு இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட தலைவர் கிருஷ்ணன், செயலாளர் பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் ஜெயச்சந்திரன், பரமேஸ்வரன், தினகர்சாமி உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ஜுலை 1-ம் தேதி முதல் 4 சதவீத அகவிலைப்படியை வழங்க வேண்டும், குறைபாடு இல்லாத மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 20 சதவீதம் உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை 65-70 வயது எட்டிய பழைய ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும், சத்துணவு- அங்கன் வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.12 ஆயிரம் வழங்க வேண்டும், மூத்த குடிமக்களுக்கு ரெயில் பயணக் கட்டணச் சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    Next Story
    ×