உள்ளூர் செய்திகள்
முகக்கவசம் அணிய வலியுறுத்தி விழிப்புணர்வு

அலுவலகங்களில் முக‌க்கவசம் அணியாதவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும்- தமிழக அரசு அறிவுறுத்தல்

Published On 2022-01-19 03:43 GMT   |   Update On 2022-01-19 06:09 GMT
300 பேருக்கு அதிகமாக இருக்கும் தொழிற்சாலைகளில் சுகாதார ஆய்வாளரை நியமிக்க வேண்டும் என தமிழக அரசு கூறியுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் அதிவேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் தினசரி பாதிப்பு 23,888-ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்து வருகிறது. கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பணியிடங்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பணியிடங்களில் முகக்கவசம் அணியாதவர்களை தனியார் நிறுவனங்கள் உடனடியாக வெளியேற்ற வேண்டும்.

அறிகுறி உள்ள பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை சோதனை செய்ய வேண்டும்.

300 பேருக்கு அதிகமாக இருக்கும் தொழிற்சாலைகளில் சுகாதார ஆய்வாளரை நியமிக்க வேண்டும்.

பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு சுற்றிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News