search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒமைக்ரான் வைரஸ்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மனிதர்களை பாதிக்கும் தொற்று நோய்கள் விலங்கிலிருந்து பரவ வாய்ப்பு உள்ளது என்பதை ஒட்டுமொத்த ஆராய்ச்சி காட்டுகிறது.
    • 'பாலுாட்டி விலங்குகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களுக்கு, பாதிப்பு ஏற்படும்' என அறிக்கைகள் கூறுகின்றன.

    கொரோனா உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது எவ்வாறு பரவியது என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    கடந்த 2021-ம் ஆண்டு தைவான் நாட்டில் ஒரு ஆய்வு மையத்தில் தனிமையில் இருந்த இளம் பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

    அவர் ஆய்வகத்தை விட்டு வேறு எங்கும் செல்லவில்லை. இதனால் அவருக்கு எப்படி கொரோனா பரவியது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பாதிப்பு ஏற்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பாக அவரை எலி கடித்தது தெரியவந்தது.

    எலி மூலம் கொரோனா பரவியதா என அப்போது பெரும் கேள்வி எழுந்தது.

    இதனைத் தொடர்ந்து ஆப்பிரிக்கா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் எலிகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் எலிகளுக்கு டெல்டா ஒமைக்ரான் வகையான உருமாறிய கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இது தொடர்பாக வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரி மற்றும் பிற இந்திய நிறுவனங்களின் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    அவர்கள் எலிகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். அதில் எலிகளிடமிருந்து உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தோன்றியிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

    மனிதர்களை பாதிக்கும் தொற்று நோய்கள் விலங்கிலிருந்து பரவ வாய்ப்பு உள்ளது என்பதை ஒட்டுமொத்த ஆராய்ச்சி காட்டுகிறது.

    விலங்குகள் மற்றும் பிற உயிரினங்களில் தொற்று நோய்கள் அவைகளுக்குள் வேகமாக பரவி பின்னர் மனிதனுக்கு பரவுகிறது.

    பின்லாந்து நாட்டில் செய்யப்பட்ட ஒரு ஆய்வில் கொரோனா வைரஸ் நோயால் எலிகள் எளிதில் பாதிக்கப்படுவதாக கண்டறிந்துள்ளனர்.

    நெதர்லாந்து நாட்டில் வெள்ளெலிகளுக்குள் ஒமைக்ரான் வைரஸ் ஒன்றுக்கொன்று பரவி பின்னர் அவற்றிலிருந்து மனிதர்களுக்கு பரவியது தெரியவந்துள்ளது.

    எலிகளிடமிருந்து மனிதர்களுக்கு ஒமைக்ரான் வைரஸ் பரவினாலும் எலிகளுக்கு இந்த நோய் எப்படி ஏற்படுகிறது என்று கேள்வி எழுந்துள்ளது.

    எலிகள் நெருக்கமாக வசிக்கும் போது அவை எளிதில் நோய் பாதிப்புக்கு ஆளாகின்றன.

    அதன் மூலம் மனிதனுக்கு காற்றில் ஒமைக்ரான் வைரஸ் பரவுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஆராய்ச்சி நிறுவனம் கொரோனா பாதிப்பு தொடர்பான ஆய்வின் முடிவுகளை சமீபத்தில் வெளியிட்டது.

    இதில், நியூயார்க்கில் சாலைகளில் சுற்றித்திரியும் எலிகள் 3 வகையான உருமாறிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளது தெரியவந்தது.

    இங்கு 79 எலிகளை சோதனை செய்ததில், 16 எலிகளுக்கு, கொரோனா தொற்றின் உருமாறிய வகைகளான ஆல்பா, டெல்டா, ஒமைக்ரான் வகை தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

    'பாலுாட்டி விலங்குகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களுக்கு, பாதிப்பு ஏற்படும்' என அறிக்கைகள் கூறுகின்றன. ஆனால் இது அரிதானது.

    எனவே, இது குறித்து குழப்பமடைய வேண்டாம் என தெரிவித்துள்ளது.

    • எக்ஸ்.பி.பி.1.5 வைரஸ் மாறுபாடு 38 நாடுகளில் பரவி உள்ளது. இங்கிலாந்து, டென்மார்க் உள்ளிட்ட நாடுகளிலும் பரவி இருக்கிறது.
    • ஐரோப்பாவில் ஒமைக்ரான் மாறுபாடு விரைவில் அதிகளவு பரவி பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பாரீஸ்:

    கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.

    சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு வைரஸ் கட்டுக்குள் வந்தாலும் பல நாடுகளில் பாதிப்பு தொடர்ந்தபடியே உள்ளது.

    அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் இருந்து வருகிறது. ஒமைக்ரான் வைரஸ் மாறுபாடான எக்ஸ்.பி.பி.1.5 வைரஸ் பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் 27 சதவீதம் பேர் ஒமைக்ரான் மாறுபாட்டுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

    இந்த எக்ஸ்.பி.பி.1.5 வைரஸ் மாறுபாடு 38 நாடுகளில் பரவி உள்ளது. இங்கிலாந்து, டென்மார்க் உள்ளிட்ட நாடுகளிலும் பரவி இருக்கிறது.

    இந்த நிலையில் ஐரோப்பாவில் ஒமைக்ரான் மாறுபாடு விரைவில் அதிகளவு பரவி பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் கூறியதாவது:-

    அமெரிக்காவில் கொரோனா பாதிப்பில் எக்ஸ்.பி.பி.1.5 வைரஸ் தொற்று பாதிப்பு 25 சதவீதத்துக்கு மேல் உள்ளது. இந்த வைரஸ் இன்று வரை மிகவும் வேகமாக பரவக்கூடியதாக உள்ளது.

    இந்த ஒமைக்ரான் மாறுபாடு ஐரோப்பாவில் ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குள் ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு உள்ளது.

    இந்த மாறுபாட்டுடன் தொடர்புடைய ஆபத்து குறைவாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும் முதியவர்கள், தடுப்பூசி போடாத, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடுள்ளவர்கள் போன்று பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கு ஆபத்து மிதமானது முதல் அதிகமானது வரை இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

    • பிஏ.2.38 வகை தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 73 சதவீதம் பேருக்கு காய்ச்சல் ஏற்படுவது தெரியவந்துள்ளது.
    • மேலும் 23 சதவீதம் பேருக்கு சளி, 17 சதவீதம் பேருக்கு உடல்வலி, 15 சதவீதம் பேருக்கு தொண்டை வலி, 13 சதவீதம் பேருக்கு தலைவலி ஏற்படுவது தெரியவந்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பதற்கு ஒமைக்ரானின் புதிய வகை திரிபான பிஏ.2 வகை தொற்று பரவுவதே காரணம் என சுகாதாரத்துறையினர் கூறுகின்றனர்.

    அதிலும் பிஏ.2 வகையில் துணை திரிபான பிஏ.2.38 வகை தொற்றுகள் மெல்ல, மெல்ல தனது ஆதிக்கத்தை செலுத்தி வருவதாக மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த வகை பிரிவுகள் வேகமாக பரவும் வாய்ப்பு உள்ளதாக எச்சரித்துள்ளனர். அதே நேரம் இந்த வகை தொற்றால் தீவிர பாதிப்பு ஏற்படுவது இல்லை என்பது சற்று ஆறுதலான விஷயமாக பார்க்கப்படுகிறது.

    இந்த வகை தொற்று பாதிப்புக்குள்ளானவர்களுக்கு காய்ச்சல், சளி, உடல் வலி, தொண்டை வலி, தலைவலி ஏற்படும் எனவும் கூறுகின்றனர்.

    பிஏ.2.38 வகை தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 73 சதவீதம் பேருக்கு காய்ச்சல் ஏற்படுவது தெரியவந்துள்ளது. மேலும் 23 சதவீதம் பேருக்கு சளி, 17 சதவீதம் பேருக்கு உடல்வலி, 15 சதவீதம் பேருக்கு தொண்டை வலி, 13 சதவீதம் பேருக்கு தலைவலி ஏற்படுவது தெரியவந்துள்ளது.

    தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டுமல்லாது குஜராத், டெல்லி, கர்நாடகா, அரியானா, உத்தரபிரதேசம், தெலுங்கானா, மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா உள்பட நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் தொற்று பாதிப்பு உயர்வதற்கு இந்த வகை தொற்றுகளே காரணமாக அமைந்துள்ளது எனவும் சுகாதரத்துறையினர் கூறுகின்றனர்.

    புதிய தொற்றால் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என்றாலும் எந்த அளவிற்கு வேகமாக பரவுகிறது என்பதை அரிய மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

    • ஒமைக்ரான் பாதிப்புக்கு பிறகு நீண்ட கால அறிகுறிகளின் ஆபத்து டெல்டாவை விட குறைவாக இருக்கிறது.
    • என்றாலும் அது தடுப்பூசியை முழுமையாக செலுத்தியவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

    லண்டன்:

    கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி தற்போது வரை பாதிப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.

    கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து உருமாறியது. ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என்று பெயரிடப்பட்டது.

    இதற்கிடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புதிய உருமாறிய கொரோனா ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது.

    மற்ற உருமாறிய கொரோனா வைரஸ்களை விட ஒமைக்ரான் வேகமாக பரவும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ஒமைக்ரான் வைரசால் பல நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்தது.

    இந்த நிலையில் மற்ற உருமாறிய கொரோனா வைரஸ்களை விட ஒமைக்ரான் நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு குறைவு என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக இங்கிலாந்தைச் சேர்ந்த லண்டன் கிங்ஸ் கல்லூரியில் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் கூறியிருப்பதாவது:-

    இங்கிலாந்தில் டெல்டா வைரசுடன் ஒப்பிடும்போது ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொற்றுக்கு பிறகு நீண்ட கால கொரோனா பாதிப்பு உருவாவதற்கான வாய்ப்பு 20 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை குறைவாக இருக்கிறது.

    இது நோயாளியின் வயது மற்றும் கடைசி தடுப்பூசி செலுத்திய நேரத்தை பொறுத்து மாறுபடும்.

    ஒமைக்ரான் பாதிப்புக்கு பிறகு நீண்ட கால அறிகுறிகளின் ஆபத்து டெல்டாவை விட குறைவாக இருக்கிறது. என்றாலும் அது தடுப்பூசியை முழுமையாக செலுத்தியவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

    2021-ம் ஆண்டு டிசம்பர் முதல் 2022-ம் ஆண்டு மார்ச் வரை ஒமைக்ரான் பாதிப்பு உச்சத்தில் இருந்த போது நோய் பாதிப்புக்கு உள்ளான 56,003 பேரில் 4.5 சதவீதம் பேர் நீண்ட கால பாதிப்பை பதிவு செய்து உள்ளனர்.

    டெல்டா வைரஸ் அலையின்போது (2021 ஜூன் முதல் நவம்பர் வரை) 41,361 பேரில் 10.8 சதவீதம் பேர் நீண்ட கால கொரோனா அறிகுறிகளுடன் இருந்து உள்ளனர்.

    இதுகுறித்து ஆராய்ச்சியாளர் டாக்டர் கிளாரி ஸ்டீவ்ஸ் கூறும்போது, ஒமைக்ரான் வைரசால் நீண்ட கால பாதிப்பு இருக்கும் வாய்ப்பு குறைவு என்றாலும் அதற்கான சிகிச்சைகளை நீக்கி விட கூடாது என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியாவில் ஒமைக்ரான் தான் பரவி இருக்கிறது.
    • 3 அலைகளின் போது கொரோனா பரவல் வேகம் மிக அதிகமாக இருந்தது.

    சென்னை:

    இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. குறிப்பாக கொரோனாவின் புதிய வடிவமான ஒமைக்ரான் அதிகளவில் பரவி இருப்பது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

    மகாராஷ்டிரா, கேரளாவில் கொரோனாவின் தாக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மாறி இருக்கிறது. இதன் எதிரொலி தமிழகத்திலும் பிரதிபலிக்கத் தொடங்கி உள்ளது.

    தமிழகத்திலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் புதிதாக 255 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று பாதிப்பு எண்ணிக்கை 332 ஆக உயர்ந்துள்ளது.

    3 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் கொரோனா தினசரி பாதிப்பு 300-ஐ கடந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி 320 பேர் தொற்றுக்கு ஆளானார்கள். அதேநிலை தற்போது உருவாகி உள்ளது.

    சென்னையில் மட்டும் 177 பேர் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 1632 ஆக உள்ளது. தொடர்ந்து இது உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதை கருத்தில் கொண்டு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்தி வருகிறார்கள். என்றாலும் மருத்துவமனையில் சேர்ந்தவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. ஆனால் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் தமிழகத்தில் 4-வது அலை வந்துவிடுமோ என்ற அச்சம் உருவாகி இருக்கிறது.

    இதுதொடர்பாக மருத்துவ நிபுணர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். இது குறித்து அவர்கள் கூறுகையில், 'தமிழகத்தில் கொரோனா 4-வது அலை வருவதற்கு வாய்ப்பே இல்லை' என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.

    பிரபல தொற்றுநோய் தடுப்பு நிபுணர் டாக்டர் ஜேக்கப் ஜான் கூறியதாவது:-

    தமிழகத்தில் கொரோனா தாக்கம் உருவாகி 3 அலைகள் உருவான போது இருந்த நிலைக்கும், தற்போதைய சூழ்நிலைக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. 3 அலைகளின் போது கொரோனா பரவல் வேகம் மிக அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது அதில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

    ஒரு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்தால் மறுநாள் அந்த எண்ணிக்கை கணிசமாக குறைந்து விடுகிறது. கொரோனா வைரஸ் பரவல் இப்படி ஏறுவதும் இறங்குவதுமாக உள்ளது.

    அதுமட்டுமின்றி தற்போது பரவி வரும் ஒமைக்ரான் சாதாரண பாதிப்பை உருவாக்குகிறது. அப்படி பாதித்தாலும் விரைவில் குணமடைந்து விடும் நிலையை மக்கள் பெற்றுள்ளனர்.

    இத்தகைய காரணங்களால் தமிழகத்தில் 4-வது அலை வராது. தற்போது உருவாகி இருப்பது சற்று ஏற்ற இறக்கம் தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னையை சேர்ந்த மணிகண்டன் நேசன் கூறுகையில், 'இந்தியாவில் ஒமைக்ரான் தான் பரவி இருக்கிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் புதிய வகை கொரோனா பரவி உள்ளது. நமது நாட்டில் சாதாரண பாதிப்பு உள்ளதால் 4-வது அலைக்கு வாய்ப்பு இல்லை' என்றார்.

    பொதுசுகாதாரத்துறை இயக்குனர் செல்வநாயகம் கூறுகையில், 'தமிழகத்தில் முதியவர்கள் மற்றும் நடுத்தர வயதுடையவர்கள் பூஸ்டர் டோஸ் போடாமல் இருப்பது கவலை தருகிறது. என்றாலும் தற்போது ஏற்படும் அதிகரிப்பை கருத்தில் கொண்டு 4-வது அலை வரும் என்று சொல்லவே இயலாது.

    அதற்காக மக்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது. மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லும் போது கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும்' என்றார்.

    ×