உள்ளூர் செய்திகள்
மருதாநதியில் பூ எருவாட்டிகளில் தீபம் ஏற்றி வழிபட்ட பெண்களை காணலாம்

வத்தலக்குண்டு அருகே பூ எருவாட்டி விழாவில் பெண்கள் வழிபாடு

Published On 2022-01-18 11:13 GMT   |   Update On 2022-01-18 11:13 GMT
வத்தலக்குண்டு அருகே பாரம்பரியமான பூ எருவாட்டி விழாவில் பெண்கள் விளக்கு வைத்து வழிபாடு நடத்தினர்.
வத்தலக்குண்டு:

வத்தலக்குண்டு அருகே கீழக்கோவில்பட்டியில் பூ எருவாட்டி விழா என்னும் சிறுவீட்டு பொங்கல் பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கிராமத்தில் பெண்கள் வீடுகளில் பொங்கல் வைத்தனர். பின்னர் விநாயகர் மற்றும் பகவதி அம்மன் கோவில்களில் ஒன்று கூடி கும்மி பாடல் பாடினர். அதனைத் தொடர்ந்து விளக்கு, வெற்றிலைப்பாக்கு, பூ, சக்கரைப்பொங்கல் ஆகியவற்றை தாம்பூலத்தில் ஏந்தி மருதாநதிக்கு கொண்டு சென்றனர். அங்கு பூ எருவாட்டிகளில் தீபம் ஏற்றி ஆற்றில் மிதக்க விட்டு வழிபாடு நடத்தினர்.

இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில், உலக நன்மைக்கும், காடு, கரை செழிக்கவும், மக்கள் நலடுமுடன் வாழ வேண்டும் என்பதற்காகவும் கும்மி அடித்து பூஜை செய்து எருவாட்டி விழாவை காலங்காலமாக இப்பகுதி மக்கள் பின்பற்றி வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் அதே பாரம்பரியத்தை தொடர்ந்து கடைபிடித்து பின்பற்றி வருகிறோம். மேலும் சிறுமிகளுக்கு இதன் முக்கியத்துவத்தை உணர்த்தி அடுத்த தலைமுறைக்கும் எடுத்து செல்கின்றோம் என்றனர்.



Tags:    

Similar News