search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்கள் வழிபாடு"

    • வேப்ப மரத்தில் திடீரென்று பால் வடிவதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
    • தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சாத்தான்குளம்:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள படுக்கப்பத்து கிராமத்தில் சாலை ஓரத்தில் பழமையான வேப்ப மரம் ஒன்று உள்ளது.

    இந்த வேப்ப மரத்தில் திடீரென்று பால் வடிவதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

    இதை அறிந்த அப்பகுதி இளைஞர்கள், பெண்கள் அதை செல்போனில் புகைப்படமாகவும், வீடியோவாகவும் எடுத்தனர்.

    இந்த நிலையில் அப்பகுதி பெண்கள் மற்றும் ஆண்கள் அந்த வேப்ப மரத்தை சுற்றி மஞ்சள் தெளித்து வேப்பமரம் முழுவதும் சந்தனத்தை பூசி அதில் குங்குமமும் வைத்து பத்தி, கற்பூரம் ஏற்றி அதை பக்தியுடன் வழிபட தொடங்கினர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதுதொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • கம்பங்கள் நடும் விழா நடந்தது.
    • பெண்கள் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபட்டு சென்றனர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் வகையறா கோவி ல்களான சின்ன மாரி யம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில்கள் உள்ளன.

    இந்த கோவில்க ளில் இந்த ஆண்டுக்கான குண்டம் மற்றும் தேர் திருவிழா கடந்த 21-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

    இதனைத்தொடர்ந்து நேற்று இரவு 3 கோவில்களிலும் கம்பங்கள் நடும் விழா நடந்தது. இரவு 8.30 மணிக்கு பெரிய மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.

    இதைத்தொடர்ந்து காரை வாய்க்கால் மாரியம்மன், சின்ன மாரியம்மன், பெரிய மாரியம்மன் கோவில் கம்பங்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு அந்தந்த கோவில்களில் வந்தடைந்தது.

    முதல் கம்பம் பெரிய மாரியம்மன் கோவிலும், 2-வது கம்பம் சின்ன மாரியம்மன் கோவிலும், 3-வது கம்பம் காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலிலும் நடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து இரவு முதலே பெரிய மாரியம்மன் கோவிலில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் வரிசையில் நின்று கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபட்ட சென்றனர்.

    அதைத்தொடர்ந்து இன்று அதிகாலை முதல் பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபட்டு சென்றனர். இதனால் கோவிலில் கூட்டம் அலைமோதியது.

    • ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிட கோரி பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.
    • கடலாடி வடக்கு ஒன்றிய பா.ஜ.க. தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    சாயல்குடி

    கடலாடி பா.ஜ.க. சார்பில் முத்தாலம்மன் கோவிலில் பா.ஜ.க. சார்பில் 3-வது முறையாக 2024-ல் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமையவும், ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட கோரியும் 124 பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். கடலாடி வடக்கு ஒன்றிய பா.ஜ.க. தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர் ராமசாமி, மாவட்ட செயலாளர் வெற்றி மாலை, ஆன்மீக பிரிவு மாவட்ட செயலாளர் கதிர்வேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பால்சாமி, ஒன்றிய பொதுச் செயலாளர் மாரிமுத்து முன்னிலை வகித்தனர்.

    இதில் மாணவர்களின் சிலம்பாட்டம் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன், ஒன்றிய பொருளாளர் ஜெயராமலிங்கம், மாவட்ட தரவு மேலாண்மைச் செயலாளர் ஹரிஹரன், ஒன்றிய செயலாளர்கள் முருகன், மேகஜோதி, மூர்த்தி, ஒன்றிய துணைத் தலைவர்கள் சபரிநாதன், முத்துமாரி, மாணிக்க மீனாள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    • சூரியனுக்கு உகந்த ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் மிகவும் நல்லது என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    • இன்றைய தினம் நாகரை கடவுளாக வழிபடும் கோவில்களிலும் காலையில் பால், மஞ்சள் வைத்து வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.

    களக்காடு:

    ஆவணி மாதம் சூரிய பகவான் சிம்ம ராசியில் இருப்பார். அதாவது இந்த மாதம் முழுவதும் சூரியன் தன் சொந்த வீட்டில் இருப்பார்.

    எனவே சூரியனுக்கு உகந்த ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் மிகவும் நல்லது என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் ஆடி மாதம் விவசாய நிலங்களில் விதைக்கப்பட்ட பயிர்கள் நல்ல முறையில் வளர்ந்திருக்கும் சூழலில் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துகள் விளை நிலங்களில் அதிகம் காணப்படும் சூழலில் ஆண்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என பிராத்தனை மேற்கொண்டும் ஆவணி மாத வழிபாடு நடத்தப்படுகிறது.

    இன்றைய தினம் நாகரை கடவுளாக வழிபடும் கோவில்களிலும் காலையில் பால், மஞ்சள் வைத்து வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.

    இந்த நிலையில் ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நெல்லையில் வீடுகளுக்கு முன்பு பொங்கலிட்டு சூரிய பகவானை பெண்கள் வழிபாடு நடத்தினர்.

    இதற்காக அதிகாலை எழுந்து வீடுகளை சுத்தம் செய்து வீடுகள் முன்பு விளக்கு வைத்து தேங்காய், பழம் வெற்றிலை பாக்கு உள்ளிட்ட மங்களப் பொருட்களை படையலிட்டு பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் குறிப்பிட்ட வயதுடைய பெண்களை அனுமதிக்கக் கோரும் வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வில் முடிந்ததை அடுத்து, தீர்ப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #Sabarimala
    புதுடெல்லி:

    சபரிமலையில் வயது பாகுபாடின்றி பெண்களை அனுமதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு முன்னர் நடந்து வந்தது.

    தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் நாரிமன், சந்திரசூட், கன்வில்கர், இந்து மல்ஹோத்ரா அமர்வு விசாரித்த இந்த வழக்கில், கேரள அரசு, தேவசம் போர்டு, ஆன்மீக அமைப்புகள் தனித்தனியாக தங்களது வாதங்களை தாக்கல் செய்தனர். 

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடு என கேரள அரசின் சார்பில் பிரமானப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையில் கருத்து தெரிவித்த நீதிபதிகள், “ஆண்களை போல பெண்களுக்கும் வழிபாடு நடத்த உரிமை உள்ளது. பெண்களை அனுமதிக்க மறுப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது” என கூறியிருந்தனர்.

    குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் கோவிலுக்கு வருவது ஆகம விதிகளை மீறுவது என தேவசம் போர்டு சார்பில் வாதிடப்பட்டது. இந்நிலையில், வழக்கின் விசாரணை முடிந்துள்ள நிலையில், அனைத்து தரப்பினரும் தங்களது எழுத்துப்பூர்வமான வாதங்களை 7 நாட்களில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் தீர்ப்பு தேதியை ஒத்தி வைத்தனர். 
    சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழிபட பெண்களை அனுமதிக்கக் கோரும் வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், அனைத்து பெண்களையும் அனுமதிக்க தேவசம் போர்டு சம்மதித்துள்ளதாக கேரள மந்திரி தெரிவித்துள்ளார். #Sabarimala
    திருவனந்தபுரம்:

    சபரிமலையில் வயது பாகுபாடின்றி பெண்களை அனுமதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்டில் இன்று நடந்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் சந்திரசூட், கன்வில்கர் அமர்வு வழக்கை விசாரித்தது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடு என கேரள அரசின் சார்பில் பிரமானப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

    வழக்கு விசாரணையில் கருத்து தெரிவித்த நீதிபதிகள், “ஆண்களை போல பெண்களுக்கும் வழிபாடு நடத்த உரிமை உள்ளது. பெண்களை அனுமதிக்க மறுப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது” என கூறினர். 

    இது தொடர்பாக பேசிய, கேரள அறநிலையத்துறை மந்திரி சுரேந்திரன், “சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு என பிரமான பத்திரம் தாக்கல் செய்துள்ளோம். சுப்ரீம் கோர்டு இது தொடர்பாக வழங்கும் தீர்ப்பை ஏற்றுக்கொள்வோம். கேரள தேவசம் போர்டு மாநில அரசின் நிலைப்பாட்டுக்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளது” என கூறினார். 
    ×