வேப்ப மரத்தில் பால் வடிந்த அதிசயம்

கிராம மக்கள் கோவிலுக்கு சென்றபோது, அந்த வேப்ப மரத்தில் இருந்து பால் வடிவதை பார்த்துள்ளனர்.வேப்ப மரத்தில் பால் வடிவதை கூட்டம் கூட்டமாக ஆச்சரியமாக பார்த்து சென்றனர்.
வேப்ப மரத்தில் பால் வடிந்த அதிசயம்
Published on

நம்பியூர் அடுத்துள்ள பருத்திக்காட்டு பாளையத்தில் சிறிய அளவிலான விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே வேப்பமரம் உள்ளது.

இந்நிலையில் கிராம மக்கள் கோவிலுக்கு சென்றபோது, அந்த வேப்ப மரத்தில் இருந்து பால் வடிவதை பார்த்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் ஏராளமானோர் அங்கு சென்று பார்த்த போது, மரத்தின் உயரமான கிளையில் இருந்து அதிக அளவில் பால் வடிவது கண்டு ஆச்சரியமடைந்தனர்.

விநாயகர் கோவில் அருகே உள்ள வேப்ப மரத்தில் இருந்து பால் வடிவது குறித்து தகவல் அறிந்த அருகில் உள்ள கிராம மக்களும் வேப்ப மரத்தில் பால் வடிவதை கூட்டம் கூட்டமாக ஆச்சரியமாக பார்த்து சென்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பான சூழலாக நிலவியது.

X

Maalai Malar
www.maalaimalar.com