உள்ளூர் செய்திகள்
திருட்டு

வானூர் அருகே தனியார் கல்லூரியில் ரூ.2 லட்சம் பொருட்கள் திருட்டு

Published On 2022-01-18 04:10 GMT   |   Update On 2022-01-18 04:10 GMT
வானூர் அருகே தனியார் கல்லூரியின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் பொருட்களை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வானூர்:

வானூர் அருகே ஆகாசம்பட்டு கிராமத்தில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டதால், கல்லூரி மூடப்பட்டது. அலுவலக ஊழியர்கள் மட்டும் தினமும் கல்லூரிக்கு வந்து செல்கின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் கல்லூரியின் பின் பக்கம் வழியாக மர்மஆசாமிகள் உள்ளே புகுந்தனர். பின்னர் அங்குள்ள கணினி அறையை உடைத்து அங்கு வைத்திருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான கணினி மற்றும் உதிரிபாகங்களை திருடி சென்றனர். நேற்று வழக்கம்போல் கல்லூரிக்கு வந்த ஊழியர்கள் கணினி அறை உடைக்கப்பட்டு பொருட்கள் திருட்டு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து புகார் தெரிவிக்கப்பட்டதன்பேரில் வானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து விழுப்புரத்தில் இருந்து கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்து சென்றனா்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News