உள்ளூர் செய்திகள்
வயல் வெளிப்பள்ளி பயிற்சி நடந்தது.

வயல் வெளிப்பள்ளி பயிற்சி

Published On 2022-01-11 10:02 GMT   |   Update On 2022-01-11 10:02 GMT
மதுக்கூரில் வயல் வெளிப்பள்ளி பயிற்சி நடந்தது.
மதுக்கூர்:

மதுக்கூர் வட்டாரம் காடந்தங்குடி கிராமத்தில் தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டத்தின் கீழ் 30 விவசாயிகளுக்கு வயல்வெளிப் பள்ளி பயிற்சி நடத்தப்பட்டது.

சம்பா சாகுபடி அதிக அளவில் நடைபெறும் காடந்தன்குடி கிராமத்தில் சாகுபடி செலவைக் குறைத்து அதிக மகசூல் பெற வேண்டும் என்ற நோக்கில் விவசாயிகளுக்கு வயல்வெளி பள்ளி மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. 

மதுக்கூர் வேளாண் அலுவலர் சாந்தி, வேளாண் உதவி அலுவலர் 
பூமிநாதன் ஆகியோர் நெல் சாகுபடி தொழில்நுட்பங்களை 
விவசாயிகளுக்கு பயிற்சியாக வழங்கினர்.  இதில் மண் பரிசோதனை முதல் அறுவடை வரை ஆறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

இதில் மண் பரிசோதனையின் அவசியம் அதன் மூலம் மண்ணில் உள்ள சத்துக்கள் அறிந்து தேவைக்கு மட்டும் உரங்களை தெளிக்க அறிவுறுத்தப்பட்டது. 

பூச்சிகள் தாக்குதல் பொருளாதார சேத நிலை அதிகம் வந்தால் மட்டும் பூச்சி மருந்து தெளிக்கவேண்டும் இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுவது தவிர்க்கப்படுகிறது. நன்மை செய்யும் பூச்சிகள் பாதுகாக்கப்படுகிறது.

பூச்சி மருந்துக்கு ஆகும் செலவு குறைகிறது இதனை வேளாண் அலுவலர், வேளாண் உதவி அலுவலர் நெல்வயலிலும் களப் பயிற்சி அளித்தனர். இந்தப் பயிற்சிக்கான ஏற்பாடுகளை காடந்தங்குடி ஊராட்சி மன்ற தலைவர் செய்திருந்தார். 

செயல் விளக்க ஏற்பாடுகளை அட்மா திட்ட ராஜூ செய்திருந்தார்.
Tags:    

Similar News