வரதட்சணை கொடுமையின் காரணமாக மொரப்பூரை அடுத்த கருத்தாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பெண் தற்கொலை செய்து கொண்டார்
வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை
பதிவு: ஜனவரி 08, 2022 17:01 IST
கோப்புப்படம்
மொரப்பூர்:
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த கருந்தாங்குளம் கிராமத்தை பன்னீர்செல்வம் (வயது 35). இவரது மனைவி அகிலா (30). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. லோகேஷ் என்ற மகன் உள்ளான்.
இந்த நிலையில் குடும்ப தகராறு காரணமாக அகிலா, கடந்த 1&ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்தார்.
இதில் உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த அகிலா, நேற்று பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அகிலாவின் தாய் அல்லி, மொரப்பூர் போலீசில் புகார் செய்தார். அதில், தனது மகளிள் அகிலா, வரதட்சணை சித்ரவதை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வசந்தா, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :