search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PaneerSelvam"

    எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை அகற்றும் வரை எனது போராட்டம் ஓயாது என துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பேசினார். #EdappadiPalaniswami #Dhinakaran

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் அ.ம.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. உண்ணாவிரதத்தை முடித்து வைத்து துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பேசியதாவது:-

    நிலக்கோட்டை தொகுதியில் 1977-க்கு பிறகு 1996 தேர்தல் நீங்கலாக பிற தேர்தலில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நிறுத்திய வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர். ஜெயலலிதாவால் எம்.எல்.ஏ.வாக ஆக்கப்பட்ட 18 பேர்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தகுதி நீக்கம் செய்துள்ளார்.

    இது அவருக்கு தற்காலிக வெற்றிதான். மக்கள் ஆதரவு இல்லாத ஆட்சி விரைவில் அகற்றப்படும். மக்கள் இவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்.


    இடைத்தேர்தல் மட்டுமல்லாது மக்களவை தேர்தல் உள்பட எந்த தேர்தல் வந்தாலும் அ.ம.மு.க. வெற்றி பெறும். அ.தி.முக. டெபாசிட் கூட வாங்க முடியாது. வெற்றியும் பெற முடியாது. என்னை துரோகி என்கிறார்கள். ஆனால் உண்மையான துரோகி தற்போதைய ஆட்சியாளர்கள்தான்.

    எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆட்சியை அகற்றும் வரை எனது போராட்டம் ஓயாது. நடைபெற உள்ள இடைத்தேர்தலில் 20 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் பேசுகையில், ஜெயலலிதாவுக்கு ஸ்லோ பாய்சன் கொடுக்கப்பட்டதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளார். இதனை நிரூபித்தால் அதற்கான தண்டனையை பெற தயாராக இருக்கிறோம். ஆனால் உண்மைக்கு புறம்பாக அவதூறாக பேசியவர்களுக்கு மக்கள் தண்டனை கொடுப்பார்கள் என்றார். #EdappadiPalaniswami #Dhinakaran

    மருதுபாண்டியர் நினைவுதினத்தையொட்டி திருப்பத்தூரில் உள்ள அவரது சிலைக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். #MaruthuPandiyar
    திருப்பத்தூர்:

    சுதந்திர போராட்ட வீரர்களான மருதுபாண்டியர்களின் 217-ம் ஆண்டு நினைவுதினம் திருப்பத்தூரில் நேற்று அரசு விழாவாக நடைபெற்றது. இதையொட்டி மருதுபாண்டியர்கள் வாரிசுதாரர் ராமசாமி தலைமையில் மணிமண்டபம் முன்பு பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் தேசிய கொடியேற்றப்பட்டது. இதைதொடர்ந்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.காமராசு, ஓ.எஸ்.மணியன், பாஸ்கரன், கடம்பூர் ராஜூ, மாபா பாண்டியராஜன், மணிகண்டன் ஆகிய 7 அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், கோகுல இந்திரா, பி.ஆர். செந்தில்நாதன் எம்.பி., சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட ஆவின் தலைவர் கே.ஆர்.அசோகன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



    முன்னதாக திருப்பத்தூர் வந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களுக்கு ஒன்றிய செயலாளர் ராமலிங்கம், நகர செயலாளர் இப்ராம்ஷா ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க.வினர் கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.நாகராஜன், கரு.சிதம்பரம், புதுத்தெரு முருகேசன், வக்கீல் ராஜசேகர், ஒன்றிய துணைச் செயலாளர் முருகேசன், ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் மாவட்ட செயலாளர் ஆனிமுத்து, ஜெயலலிதா பேரவை செயலாளர் மருதுபாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    மேலும் தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் எம்.எல்.ஏ. தலைமையில் மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநில மருத்துவர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் சரவணன், மாவட்ட துணைச் செயலாளர்கள் சேங்கைமாறன், மணிமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன், தி.மு.க. மாவட்ட முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பள்ளத்தூர் ரவி, கே.எஸ்.நாராயணன், ஒன்றிய செயலாளர்கள் சண்முகவடிவேல், மாணிக்கம், நெடுஞ்செழியன், நகர செயலாளர் கார்த்திகேயன், ஒன்றிய இளை ஞரணி துணை அமைப்பாளர் கண்ணன் மற்றும் மகளிரணியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சுப்புராம், ராம.அருணகிரி ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட பொருளாளர் பழனியப்பன், பாபா அமீர்பாதுஷா, வட்டார தலைவர் பன்னீர்செல்வம், நகர தலைவர் திருஞானசம்பந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ம.தி.மு.க. சார்பில் அதன் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் செவந்தியப்பன், பாண்டியன், கோட்டையிருப்பு கலைச்செல்வன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் கே.கே.உமாதேவன் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இதேபோல் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நடிகர் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் மாவட்ட செயலாளர் ராமேஸ்வரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதுதவிர பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், வர்த்தக சங்கத்தினர், மாணவ-மாணவிகள், சமுதாய பிரமுகர்கள் கலந்துகொண்டு மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    மாரடைப்பால் மரணம் அடைந்த அ.தி.மு.க. நிர்வாகி குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். #EdappadiPalaniswami #PaneerSelvam

    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    கோவை புறநகர் மாவட்டம் குனியமுத்தூர் பகுதி 92-வது வட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி யூசுப் 30-ந்தேதி சென்னையில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு விட்டு வீடு திரும்பும்போது மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்பதை அறிந்து மிகுந்த வருத்தமுற்றோம்.

    அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அவரது குடும்பத்திற்கு அ.தி.முக. சார்பில் குடும்ப நல நிதி உதவியாக ரூ.2 லட்சம் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

    அண்ணா பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு 15-ந் தேதி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்துகின்றனர். #EdappadiPalaniswami #Paneerselvam #AnnaBirthDay
    சென்னை:

    அண்ணா பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு 15-ந் தேதி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்துகின்றனர். அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அறிஞர் அண்ணா 110-வது பிறந்தநாளையொட்டி 15-ந் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், கட்சியின் அனைத்து பிரிவு நிர்வாகிகளும் பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    அறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்த நாளை முன்னிட்டு, 15.9.2018 முதல் 17.9.2018 வரை 3 நாட்கள், அண்ணா பிறந்தநாள் பொதுக் கூட்டங்கள் அ.தி.மு.க. அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் நகரங்களிலும், மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, டெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.

    பொதுக்கூட்டங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள இடங்கள், அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விவரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர்கள், தங்கள் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை அனைத்து நிர்வாகிகளுடனும் இணைந்து நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    பொன்னேரியில் நடக்கும் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், காஞ்சீபுரத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்கின்றனர். மற்ற மாவட்டங்களில் மாவட்டங்களை சார்ந்த அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள். 
    ×