உள்ளூர் செய்திகள்
வன்கொடுமை

கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்ததாக புகார்- பழங்குடியின சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை

Published On 2022-01-07 05:03 GMT   |   Update On 2022-01-07 05:03 GMT
கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வந்த புகாரையடுத்து பழங்குடியின சிறுமிக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடந்தது.
ஆனைமலை:

கோவை மாவட்டம் ஆனைமலை போலீஸ் நிலையத்தில் தன்னார்வலர் தன்ராஜ் என்பவர் புகார் ஒன்றை கொடுத்தார்.

அந்த புகாரில், டாப்சிலிப் அருகே கடந்த 1-ந் தேதி 12 வயது சிறுமியை ஒரு கும்பல் கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. இதில் ஈடுபட்ட மர்மநபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து அந்த சிறுமி வசிக்கக்கூடிய பகுதிக்கு போலீசார் நேரில் சென்று, சிறுமியின் பெற்றோர் மற்றும் சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டதாக வந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தினோம். முதற்கட்ட விசாரணையில், அந்த சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடக்கவில்லை என தெரிகிறது. இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.

விரைவில் புலன் விசாரணையை முடித்து, குறித்த காலத்திற்குள் இறுதி அறிக்கை செய்ய சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.

இதற்கிடையே பழங்குடியின சிறுமியை போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அங்கு மாணவிக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.

இந்த அறிக்கை இன்று வர உள்ளது. மருத்துவ அறிக்கையின் முடிவிலேயே சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்து உள்ளதா? என்பது குறித்த முழு விவரம் தெரியவரும்.

Tags:    

Similar News