உள்ளூர் செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு கொரோனா தொற்று

Published On 2021-12-03 09:41 GMT   |   Update On 2021-12-03 09:41 GMT
விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் முதன்மை கல்வி அதிகாரியாக கிருஷ்ணபிரியா என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில வாரங்களாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார். பள்ளிகளை சூழ்ந்திருந்த தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டார்.

இந்த நிலையில் கிருஷ்ணபிரியாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சளி மற்றும் காய்ச்சலினால் அவதிப்பட்டு வந்தார். இதைத்தொடர்ந்து அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில் கிருஷ்ணபிரியாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Tags:    

Similar News