உள்ளூர் செய்திகள்
கைது

பட்டுக்கோட்டை அருகே திருட்டுதனமாக மதுபாட்டில் விற்றவர் கைது

Published On 2021-12-01 10:41 GMT   |   Update On 2021-12-01 10:41 GMT
அரசு மதுபான கடைகள் 12 மணிக்கு திறக்கப்படும் என்பதால் பட்டுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் சிலர் திருட்டுதனமாக அதிகாலை முதல் மதுபாட்டில்கள் விற்பனை செய்து வருகின்றனர்.

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டை அடுத்த ஆலடிக்குமுளை ஊராட்சி தங்கம் மண்டபம் எதிரே திருட்டுதனமாக மதுபாட்டில் விற்பனை நடைபெறுவதாக பட்டுக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு சட்டவிரோதமாக மது விற்று கொண்டிருந்த கள்ளக்குறிச்சி தட்சன் பேட்டையை சேர்ந்த முருகன் (வயது 48) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.8260 மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அரசு மதுபான கடைகள் 12 மணிக்கு திறக்கப்படும் என்பதால் பட்டுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் சிலர் திருட்டுதனமாக அதிகாலை முதல் மதுபாட்டில்கள் விற்பனை செய்து வருகின்றனர். இதனை தீவிர நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News