செய்திகள்
ஓ.பன்னீர்செல்வம்

சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன்?- ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்

Published On 2021-08-18 05:47 GMT   |   Update On 2021-08-18 05:47 GMT
ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் திமுக அரசு ஈடுபட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை:

கலைவாணர் அரங்கத்தில் இன்று தமிழக சட்டசபை கூடியது. அப்போது, கொடநாடு விவகாரம் தொடர்பாக சட்டசபையில் அமளி ஏற்பட்டது. இதையடுத்து கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை மீண்டும் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து சட்டசபைக்கு வெளியே எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக   உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

* சட்டசபையை இன்றும், நாளையும் அதிமுக புறக்கணிக்கிறது.


* அதிகாரத்தின் மூலம் பொய்  வழக்குகளை போட்டு எதிர்க்கட்சிகளை நசுக்க முயற்சி நடைபெறுகிறது.

* எந்த வழக்குகளுக்கும் அஞ்சமாட்டோம், சட்டப்படி எதிர்கொள்வோம்.

* எதிர்க்கட்சிகளுக்கு சட்டமன்றத்தில் பேச வாய்ப்பு தராத போக்கு தொடர்கிறது.

* ஜனநாயக விரோத நடவடிக்கைகளில்  திமுக அரசு ஈடுபட்டுள்ளது.

* திமுக அரசின் செயல்களை கண்டிக்கும் வகையில்  சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளோம்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.


Tags:    

Similar News