செய்திகள்
அபராதம்

இருகூர் பகுதியில் தடையை மீறிய கடைகளுக்கு அபராதம்

Published On 2021-06-19 09:24 GMT   |   Update On 2021-06-19 09:24 GMT
இருகூர் பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 10-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் தெருவோர கடைகளுக்கு பேரூராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

நீலாம்பூர்:

கோவை மாவட்டத்தின் எல்லைப் பகுதியாகவும் புறநகர்ப் பகுதியாகவும் சூலூர் இருந்து வருகிறது. இந்நிலையில் மாவட்டத்திற்கு அடுத்தபடியாக நோய்த்தொற்று பரவல் அதிகம் உள்ள இடமாகவும் உள்ளது. நாள்தோறும் 200க்கும் மேற்பட்டவர்கள் இப்பகுதியில் நோய்தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.

இந்தநிலையில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி பொதுமக்கள் வெளியே சுற்றுவதாலும் அதிக அளவில் கடைகள் திறந்து இருப்பதாலும் அது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருவாய்த் துறை அதிகாரிகளுக்கும் வட்டாட்சியருக்கும் புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவிட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து இருகூர் பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 10-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் தெருவோர கடைகளுக்கு பேரூராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர். மேலும் அனுமதியின்றி செயல்பட்ட கடைகள் மற்றும் பேக்கரிகள் உணவகங்களுக்கு சீல் வைத்தனர். ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை இந்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது மேலும் ஊரடங்கின் போது வெளியே சுற்றும் பொதுமக்கள், மாஸ்க் அணியாமல் செல்பவர்கள் மீதும் பேரூராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்பட்டது.

நேற்று மட்டும் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் மாஸ்க் அணியாமல் சென்றதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நோய் தொற்று அதிகம் பரவிய பகுதிகளில் பொதுமக்கள் வெளியேறாத வண்ணம் தற்காலிகத் தடுப்புகள் அமைக்கப்படும் நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News