செய்திகள்
மு.க.ஸ்டாலின்

இன்று 126-வது பிறந்தநாள்: காயிதே மில்லத் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை

Published On 2021-06-05 04:44 GMT   |   Update On 2021-06-05 04:44 GMT
சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சென்னை:

தமிழக அரசின் சார்பில், கண்ணியத் தென்றல் காயிதே மில்லத்தின் 126-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. 

இதையொட்டி சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள அவருடைய நினைவிடத்தில், இன்று காலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News