செய்திகள்
மினிலாரி பறிமுதல்

தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த ரூ.4 லட்சம் புகையிலை பொருட்கள், மினிலாரி பறிமுதல்

Published On 2020-10-12 01:20 GMT   |   Update On 2020-10-12 01:20 GMT
வேடசந்தூர் அருகே தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த ரூ.4 லட்சம் புகையிலை பொருட்கள் மற்றும் மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வேடசந்தூர்:

வேடசந்தூர் அருகே உள்ள வே.புதுக்கோட்டை ஊராட்சி சிக்குபள்ளம்புதூரை சேர்ந்தவர் நூர்முகமது (வயது 40). இவர் பீடி, சிகரெட் உள்ளிட்ட பொருட்களை மினி லாரியில் கொண்டு சென்று கடைகளுக்கு விற்பனை செய்து வந்தார். இவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வே.புதுக்கோட்டையில் உள்ள தனது தோட்டத்தில் பதுக்கி வைத்திருப்பதாக நேற்று இரவு வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரது தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது தோட்டத்தில் நின்ற மினிலாரியில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள 700 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து புகையிலை பொருட்கள் மற்றும் மினி லாரியை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News