search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புகையிலை பொருட்கள் பறிமுதல்"

    • பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகாமையில் உள்ள கடைகளில் சோதனை
    • அறிவிப்பு பதாகை வைக்கவும் அறிவுரை

    வாணியம்பாடி:

    ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் ச.பசுபதி தலை மையில், சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, காவல் துறை மற்றும் வாணியம்பாடி நகராட்சி பணியாளர்கள் இணைந்து உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, வாணியம் பாடி நகராட்சிக்குட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகாமையில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர்.

    அப்போது விற்பனைக்கு வைத்திருந்த பான்பராக் மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். மேலும் கடைகளில் உள்ள புகையிலை சம்பந்தப் பட்ட விளம்பரங்களை அப்புறப்படுத்தவும், புகை பிடிக்க தடை செய்யப்பட்ட பகுதி என அறிவிப்பு பதாகை வைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

    நகராட்சி ஆணையாளர் பொறுப்பு) சங்கர், மண்டல துணை தாசில்தார் விமல் மோகன், நகராட்சி சுகாதார ஆய் வாளர் செந்தில்குமார், சரவணன் மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர், போலீசார், சுகாதார ஆய்வாளர்கள், வாணியம்பாடி நகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர் கள் உடன் இருந்தனர்.

    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி மற்றும் போலீசார், சின்ன முதலைப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட னர்.
    • தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 900 கிலோ புகையிலை பொருட்கள் சுமார் 30 மூட்டைகளில் இருப்பது தெரியவந்தது.

    நாமக்கல்:

    நாமக்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி மற்றும் போலீசார், சின்ன முதலைப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட னர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த சரக்கு வாகனத்தை சுற்றிலும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நின்று கொண்டு இருந்தனர்.

    அவர்கள், அந்த வாக னத்தை சோதனை செய்ய சென்றபோது, டிரைவர் வாகனத்தை எடுத்து செல்ல முயன்றார். அப்போது அங்கு சென்ற போலீசார், வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.

    இதில் அந்த வாகனத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 900 கிலோ புகையிலை பொருட்கள் சுமார் 30 மூட்டைகளில் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து புகையிலை பொருட்களை சரக்கு வாக னத்துடன் போலீசார் பறி முதல் செய்தனர். இதை யடுத்து சரக்கு வாகன டிரைவர் சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள செம்மாண்டப் பட்டியை சேர்ந்த தங்கதுரை (வயது 40) என்பவரை போலீ சார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட சரக்கு வாகனம் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் ஆகும்.

    • தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வரப்ப டுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
    • மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார்.

    அன்னூர்,

    கோவை மாவட்டம் அன்னூர் தென்னம்பாளையம் சாலையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வரப்ப டுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    தகவலில் பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தகுமார், பாண்டியராஜ், ஏட்டு கருணாகரன், காவலர் குருசாமி தலைமையிலான போலீசார் தென்னம்பாளையம் சாலையில் உள்ள உதயமரத்து கருப்பராயன் கோவில் அருகே தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார்.அவரை விரட்டி பிடித்த போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் சுண்டமேடு பகுதியை சேர்ந்த சுகந்தராஜ்(55) என்பதும், இவரது சொந்த ஊர் கர்நாடக மாநிலம் மைசூர் என்பதும் தெரியவந்தது. இவர் மோட்டார் சைக்கிளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக கொண்டு செல்வதும் கண்டு பிடிக்கப்பட்டது.இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடமிருந்து 50 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

    • சிறுவலூர் போலீசார் காளிசெட்டிபாளையம் பகுதியில் ரோந்து சென்று ஆய்வு செய்தனர்.
    • 40.473 கிலோ எடை கொண்ட 485 பாக்கெட் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்த னர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காளிசெட்டி பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீ சாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் சிறுவலூர் போலீசார் காளிசெட்டிபாளையம் பகுதியில் ரோந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் ஒரு வாலிபர் புகையிலை பொரு ட்களை பதுக்கி வைத்து இருந்தது தெரிய வந்தது.

    இதை தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் காளிசெட்டி பாளையம் பகுதியை சேர்ந்த கதிரேசன் என்பதும், அவர் தடை செய்யப்பட்ட புகை யிலை பொருட்களை வீட்டில் வைத்து கடைகளில் விற்பனை செய்து வருவது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் வீட்டின் பின்புறம் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ஹான்ஸ், போதை பாக்கு உள்பட 40.473 கிலோ எடை கொண்ட 485 பாக்கெட் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்த னர்.

    இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கதிரேசனை கைது செய்து தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • மேச்சேரி பகுதியில் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ், நேற்று இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.
    • அட்டைப் பெட்டிகளில் 11/2 டன் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியில் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ், நேற்று இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது அதிகாலையில், மேச்சேரி காமனேரி அருகே, அந்த வழியாக வந்த சரக்கு வேனை மடக்கி பிடித்து சோதனை செய்தார்.

    இதில், அட்டைப் பெட்டிகளில் 11/2 டன் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.

    வேன் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் ராஜஸ்தான் மாநிலம் அர்பாலியா பகுதியைச் சேர்ந்த பவன் தேவ்சோட் (வயது24) என்பதும், பெங்களூரில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்ததும் தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேனை போலீசார் நிறுத்த முயன்ற போது டிரைவர் வேனை நிறுத்தா மல் வேகமாக சென்று மற்றொரு வாகனத்தில் மோதினார்
    • தப்பி ஓடியவர்கள் போலீசிடம் சிக்கினால் தான் இந்தக் கடத்தல் பின்னணியில் யார்? யார்? உள்ளார்கள் என தெரியவரும்.

    ஈரோடு:

    சித்தோடு சப் -இன்ஸ்பெ க்டர் குக்கேஸ்வரன் தலை மையிலான போலீசார் நசியனூர் அடுத்த கந்தம்பாளையம் பிரிவு கோவை- சேலம் பைபாஸ் ரோட்டில் வாகன சோத னையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக சரக்கு வாகனம் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த வேனை போலீசார் நிறுத்த முயன்ற போது டிரைவர் வேனை நிறுத்தா மல் வேகமாக சென்று மற்றொரு வாகனத்தில் மோதினார். இதையடுத்து அந்த சரக்கு வேனில் இருந்த 2 பேர் தப்பி ஓடி விட்டனர்.

    இதையடுத்து சித்தோடு போலீசார் சந்தேகம் அடைந்து வேனின் பின் பகுதியை சோதனை செய்த போது தடை செய்யப்பட்ட ஹான்ஸ், பான் மசாலா, புகையிலைப் பொருட்கள் மூட்டை மூட்டையாக இருந்தன.

    மொத்தம் 400 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

    இந்த புகையிலை பொரு ட்களை எங்கிருந்து எங்கு கடத்தி சென்றார்கள் என தெரியவில்லை. புகையிலை பொருட்களையும், சரக்கு வேனையும் போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடியவர்கள் போலீசிடம் சிக்கினால் தான் இந்தக் கடத்தல் பின்னணியில் யார்? யார்? உள்ளார்கள் என தெரியவரும்.

    இந்த சம்பவம் அப்பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
    • காரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 165 கிலோ இருந்தது.ரூ.60,000 மதிப்பிலான அவற்றை காருடன் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    ஓசூர் ஜூஜூவாடி சோதனை சாவடி அருகே சிப்காட் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அந்த காரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 165 கிலோ இருந்தது.ரூ.60,000 மதிப்பிலான அவற்றை காருடன் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    புகையிலை பொருட்களை பெங்களூ ருவிலிருந்து தென்காசிக்கு கடத்தி சென்ற தென்காசியை சேர்ந்த முத்துகிருஷ்ணபாண்டியன் (வயது 29),சிவா (24) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    • பெங்களூரில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த ரெயிலை திண்டுக்கல்லில் நிறுத்தி சோதனையிட்டனர்.
    • 31 கிலோ எடை கொண்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை, கஞ்சா ஆகியவற்றின் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

    ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், ராஜேஸ்குமார் ஆகியோர் கொண்ட போலீசார் பெங்களூரில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த ரெயிலை திண்டுக்கல்லில் நிறுத்தி சோதனையிட்டனர்.

    அப்போது நெல்லை மாவட்டம் சுப்பையாபுரம் தெற்குதெருவை சேர்ந்த சேவியர்(30) என்பவர் வைத்திருந்த பையில் புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 31 கிலோ எடை கொண்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் சேவியர் மீது வழக்குபதிவு செய்து இவர் எங்கிருந்து இதனை வாங்கி வந்தார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களை போலீசார் கண்டுபிடித்தனர்
    • தஞ்சை மாவட்டம் பேராவூரணியைச் சேர்ந்த பால முருகன் (37), ஆவணம் பகுதியைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்

    புதுக்கோட்டை:

    தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ள குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் வெளிமாநிலங்களில் இருந்து புகையிலை பொருட்கள் கடத்தி வருவதை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதன் தொடர்ச்சியாக தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்திலும் போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதற்கிடையே ஆலங்குடி அருகேயுள்ள கீழாத்தூர் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலைத்தொடர்ந்து, அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது, அப்பகுதியில் உள்ள மளிகை கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1.10 லட்சம் மதிப்புள்ள 196 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இதுதொடர்பாக, தஞ்சை மாவட்டம் பேராவூரணியைச் சேர்ந்த பால முருகன் (37), ஆவணம் பகுதியைச் சேர்ந்த பரூக்(61), கீழாத்தூர் சாந்தி நகரைச் சேர்ந்தவர்கள் ஆறுமுகம் (40), ராஜா(31) ஆகிய பேரையும் கைது செய்து வடகாடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வாகனத்துடன் சேர்த்து ரூ.2,87,500 மதிப்புள்ள போதை பொருளை பறிமுதல் செய்தனர்.
    • 2 பேர் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டமோசூர் சிப்காட் போலீஸ் சரகம் ஜூஜூவாடி செக்போஸ்ட் பகுதியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக வந்த ஒரு வேனை போலீசார் நிறுத்தினர்.

    அப்போது வேனில் இருந்தவர்களில் 5 பேர் அங்கிருந்து தப்பி ஓடினர். போலீசாரிடம் 2 பேர் மட்டும் சிக்கினர்.

    அந்த வேனில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது. பெங்களூரு விலிருந்து சேலத்துக்கு அதனை கடத்தி சென்றது தெரியவந்தது.

    வாகனத்துடன் சேர்த்து ரூ.2,87,500 மதிப்புள்ள போதை பொருளை பறிமுதல் செய்த போலீசார் தங்களிடம் பிடிப்பட்ட சேலம் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் (35),தமிழரசன்(39) ஆகிய 2 போரையும் கைது செய்தனர்.

    தலைமறைவான தசரதன் (எ) ராம்தேவ், யாசீர்கான், மணி, ரவி, லிங்கம் ஆகிய 5 போரையும் தேடி வருகின்றனர்.

    • திண்டுக்கல் ரெயில்வே பாதுகாப்பு சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் தலைமையிலான போலீசார் மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை சோதனையிட்டனர்
    • கேட்பாரற்று கிடந்த பேக்கில் அரசால் தடைசெய்யப்பட்ட 4.180 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் ரெயில்வே பாதுகாப்பு சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் தலைமையிலான போலீசார் மைசூரில் இருந்து தூத்துக்குடி சென்ற ரெயிலை கொடைரோடு ரெயில்நிலையத்தில் இன்று காலை சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது ஒரு பேக் கேட்பாரற்ற நிலையில் கிடந்தது. அது யாருடையது என பயணிகளிடம் கேட்டபோது யாரும் சொந்தம் கொண்டாடவில்லை. இதனைதொடர்ந்து போலீசார் அதனை சோதனை நடத்தினர்.

    அப்போது பல்வேறு வகையான அரசால் தடைசெய்யப்பட்ட 4.180 கிலோ புகையிலை பொருட்கள் அதில் இருந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார் இதனை கடத்தி வந்த நபர்கள் யார் என்பது குறித்து ரெயில்நிலையத்தில் உள்ள சிசிடிவி காமிரா காட்சி பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×