search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Seizure of tobacco products"

    • பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகாமையில் உள்ள கடைகளில் சோதனை
    • அறிவிப்பு பதாகை வைக்கவும் அறிவுரை

    வாணியம்பாடி:

    ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் ச.பசுபதி தலை மையில், சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, காவல் துறை மற்றும் வாணியம்பாடி நகராட்சி பணியாளர்கள் இணைந்து உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, வாணியம் பாடி நகராட்சிக்குட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகாமையில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர்.

    அப்போது விற்பனைக்கு வைத்திருந்த பான்பராக் மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். மேலும் கடைகளில் உள்ள புகையிலை சம்பந்தப் பட்ட விளம்பரங்களை அப்புறப்படுத்தவும், புகை பிடிக்க தடை செய்யப்பட்ட பகுதி என அறிவிப்பு பதாகை வைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

    நகராட்சி ஆணையாளர் பொறுப்பு) சங்கர், மண்டல துணை தாசில்தார் விமல் மோகன், நகராட்சி சுகாதார ஆய் வாளர் செந்தில்குமார், சரவணன் மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர், போலீசார், சுகாதார ஆய்வாளர்கள், வாணியம்பாடி நகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர் கள் உடன் இருந்தனர்.

    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி மற்றும் போலீசார், சின்ன முதலைப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட னர்.
    • தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 900 கிலோ புகையிலை பொருட்கள் சுமார் 30 மூட்டைகளில் இருப்பது தெரியவந்தது.

    நாமக்கல்:

    நாமக்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி மற்றும் போலீசார், சின்ன முதலைப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட னர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த சரக்கு வாகனத்தை சுற்றிலும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நின்று கொண்டு இருந்தனர்.

    அவர்கள், அந்த வாக னத்தை சோதனை செய்ய சென்றபோது, டிரைவர் வாகனத்தை எடுத்து செல்ல முயன்றார். அப்போது அங்கு சென்ற போலீசார், வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.

    இதில் அந்த வாகனத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 900 கிலோ புகையிலை பொருட்கள் சுமார் 30 மூட்டைகளில் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து புகையிலை பொருட்களை சரக்கு வாக னத்துடன் போலீசார் பறி முதல் செய்தனர். இதை யடுத்து சரக்கு வாகன டிரைவர் சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள செம்மாண்டப் பட்டியை சேர்ந்த தங்கதுரை (வயது 40) என்பவரை போலீ சார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட சரக்கு வாகனம் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் ஆகும்.

    • மேச்சேரி பகுதியில் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ், நேற்று இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.
    • அட்டைப் பெட்டிகளில் 11/2 டன் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியில் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ், நேற்று இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது அதிகாலையில், மேச்சேரி காமனேரி அருகே, அந்த வழியாக வந்த சரக்கு வேனை மடக்கி பிடித்து சோதனை செய்தார்.

    இதில், அட்டைப் பெட்டிகளில் 11/2 டன் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.

    வேன் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் ராஜஸ்தான் மாநிலம் அர்பாலியா பகுதியைச் சேர்ந்த பவன் தேவ்சோட் (வயது24) என்பதும், பெங்களூரில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்ததும் தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×