இந்தியா

குஜராத் தீ விபத்து: எந்த அனுமதியும் இல்லாமல் இயங்கிய விளையாட்டு வளாகம்- விசாரணையில் அம்பலம்

Published On 2024-05-26 06:55 GMT   |   Update On 2024-05-26 06:55 GMT
  • இந்த தீ விபத்து தொடர்பாக விளையாட்டு திடல் உரிமையாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • ஒரே ஒரு அவசர வழி மட்டுமே அங்கு இருந்துள்ளதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரில் உள்ள விளையாட்டு வளாகத்தில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 9 குழந்தைகள் உட்பட 28 பேர் பலியானதாக தகவல் வெளியானது.

இந்த தீ விபத்து தொடர்பாக விளையாட்டு திடல் உரிமையாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ராஜ்கோட் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் மாநில அரசு வழங்கும் என்று முதல்வர் பூபேந்திர படேல் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், தீ விபத்து நடந்த விளையாட்டு வளாகம், அரசின் தீயணைப்பு அனுமதிக்கான தடையில்லா சான்று பெறாமலேயே இயங்கியதாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

மாநகராட்சி, தீயணைப்புத்துறை ஆகியவற்றிடம் இருந்து தேவையான எந்த அனுமதியும் விளையாட்டு திடல் உரிமையாளர் பெறவில்லை. மேலும், ஒரே ஒரு அவசர வழி மட்டுமே விளையாட்டு திடலில் இருந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News