செய்திகள்
ராகுல் காந்தி கைது செய்யப்பட்ட போது எடுத்த படம்

ராகுல்காந்தி கைது - அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்

Published On 2020-10-01 13:12 GMT   |   Update On 2020-10-01 13:12 GMT
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கைது சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:

உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் கூட்டு பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரைக் பார்க்க சென்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தியதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு ராகுல்காந்தி நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். தடை உத்தரவை மீறிச் சென்றதற்காக இருவரையும் உத்தர பிரதேச போலீசார் கைது செய்தனர்.

ராகுல்காந்தி கைது சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தனது டுவிட்டர் பக்க்கத்தில் பதிவிடப்பட்டுள்ள பதிவில்,

ராகுல் காந்தி மீது உத்தர பிரதேச போலீசாரின் இந்த பொறுப்பற்ற செயலுக்கு நான் கடுமையாக கண்டனம் தெரிவிக்கிறேன். சட்டத்தை மதித்து, ஜனநாயகக் கொள்கைகளை கடைபிடிக்கவேண்டியவர்கள் அதற்கு எதிராக நடந்துகொள்வது கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார்.

நடிகை குஷ்பு டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

யோகி ஆதித்யநாத், நீங்கள் ஒரு அரசியல்வாதி என்பதைத் தாண்டி, ஒரு மனிதனாக இருப்பதற்கே தகுதியற்றவர். இனிமேல் தங்களை ஒரு அரசியல்வாதியாக பார்க்கமாட்டேன்.

அந்த வார்த்தைக்கு பொருத்தமான ஒருவரை அவமதித்து விட்டீர்கள். உத்தரபிரதேச போலீஸ் மற்றும் உங்களை நினைத்தால் அவமானமாக இருக்கிறது. ராகுல் காந்திக்கு சல்யூட் தொடர்ந்து செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.

அகில இந்தியத்தலைவர் என்றும் பாராமல், பிடித்துத்தள்ளி மரியாதைக்குறைவாக நடத்துவது மனித உரிமைகளுக்கும் ஜனநாயக நெறிமுறைகளுக்கும் எதிரானது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஜனநாயக கடமையை ஆற்ற முயன்ற ராகுல்காந்தியை தடுத்து நிறுத்தி, கைது செய்த காவல்துறையின் செயல் கண்டனத்திற்குரியது என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News