செய்திகள்
நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீர் கலந்து செல்வதை படத்தில் காணலாம்.

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீர் கலந்ததால் பரபரப்பு

Published On 2020-04-30 12:17 GMT   |   Update On 2020-04-30 12:17 GMT
ஊரடங்கு காரணமாக திருப்பூரில் உள்ள நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீர் கலந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பூர்:

திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட சாய சலவை மற்றும் பிரிண்டிங்க ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.

ஊரடங்கு காரணமாக திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக எப்போது சாய கழிவுடன் செல்லும் நொய்யல் ஆற்றில் கடந்த ஒரு மாதமாக தண்ணீர் எந்த வித கழிவும் இல்லாமல் சுத்தமாக காட்சியளித்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதனால் சாலை மற்றும் ஆற்றில் தண்ணீர் பாய்ந்தோடியது.

அப்போது தடையை மீறி செயல்பட்டு வந்த சாய ஆலைகள் இதை தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி சாயக் கழிவு நீரை நொய்யல் ஆற்றில் திறந்து விட்டுள்ளனர்.

இதனால் திருப்பூர் மாணிக்காபுரம் புதூர் பகுதியில் கருப்பு நிறத்தில் சாயக்கழிவுநீர் ஓடியது. மேலும், பல பகுதிகளில் நுரையுடன் வெள்ளம் பாய்ந்தோடியது. இது சமூக ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தங்களது சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது.

Tags:    

Similar News