செய்திகள்
காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்திய மு.க.ஸ்டாலின்

கொரோனா பாதித்து உயிரிழந்தால் ரூ.1 கோடி வழங்க வேண்டும்- திமுக கூட்டணி கட்சிகள் தீர்மானம்

Published On 2020-04-16 08:47 GMT   |   Update On 2020-04-16 08:47 GMT
கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும் என திமுக தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை:

கொரோனா வைரஸ் தொடர்பாக மத்திய - மாநில அரசுகளின் அணுகுமுறை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கொரோனா மற்றும் ஊரடங்கால் பரிதவிக்கும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் மற்றும் நிவாரண உதவிகள் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலார் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் இதில் பங்கேற்றனர். பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் தேவைகள், மத்திய - மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்து, அனைத்து கட்சித் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். 

கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் உயிரிழப்பிற்கு வழங்கப்படும் ரூ.10 லட்சம் நிவாரணம் போதாது, தடுப்பு பணியாளர்கள் உயிரிழந்தால் குடும்பத்திற்கு ரூ.1கோடி நிவாரணம் வழங்க வேண்டும், கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 8 தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. 
Tags:    

Similar News