செய்திகள்
பாஜக கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

23 மாத நிலுவை அரிசிக்கு பணம் வழங்க கோரி பா.ஜனதா ஆர்ப்பாட்டம்

Published On 2020-03-03 12:56 GMT   |   Update On 2020-03-03 12:56 GMT
புதுவை அரசு 23 மாதமாக வழங்க வேண்டிய இலவச அரிசிக்கான பணத்தை உடனடியாக வங்கியில் செலுத்த வலியுறுத்தி பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுச்சேரி:

ஏழை மக்களை ஏமாற்றும் காங்கிரஸ் அரசை கண்டித்தும், புதுவை அரசு 23 மாதமாக வழங்க வேண்டிய இலவச அரிசிக்கான பணத்தை உடனடியாக வங்கியில் செலுத்த வலியுறுத்தியும் பா.ஜனதா சார்பில் சட்டசபையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்காக இன்று காலை பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் மி‌ஷன்வீதியில் பா.ஜனதாவினர் திரண்டனர்.

பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக சட்டமன்றம் நோக்கி வந்தனர். அவர்களை ஆம்பூர் சாலையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். அங்கு காங்கிரஸ் அரசை கண்டித்தும், 23 மாத நிலுவை அரிசிக்கு பதிலாக பணம் வழங்க வலியுறுத்தியும் பா.ஜனதாவினர் கோ‌ஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சங்கர், செல்வகணபதி, மாநில நிர்வாகிகள் தங்க. விக்ரமன், ரவிச்சந்திரன், செல்வம், ஏம்பலம் செல்வம், துரை.கணேசன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் தாமோதரன், நாகராஜ், சாய்சரவணன், ரத்தினவேலு, அகிலன், மோகன்குமார், ஆறுமுகம், இந்திரன், சோபி, மகேஷ், பாரதிமோகன், இளங்கோ, தட்சிணாமூர்த்தி, புகழேந்தி, கணேஷ், ரமேஷ், மாவட்ட தலைவர்கள் வக்கீல் அசோக்பாபு, நாகேஸ்வரன், ஆனந்தன், தெய்வசிகாமணி, ஜெயந்தி, அனிதா, ஜெயலட்சுமி, லதா, கனகவள்ளி, வள்ளி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News