செய்திகள்
அமைச்சர் விஜயபாஸ்கர்

ஓ.பி.எஸ்சை ஜல்லிக்கட்டு நாயகர் என்று அழைப்பது ஏன்? துரைமுருகன் கேள்விக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்

Published On 2020-02-18 07:42 GMT   |   Update On 2020-02-18 07:42 GMT
துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தை ஜல்லிக்கட்டு நாயகர் என்று அழைப்பது ஏன் என்ற துரைமுருகன் கேள்விக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்துள்ளார்.

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது அ.தி.மு.க. உறுப்பினர்கள் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ஜல்லிக்கட்டு நாயகர் என்று குறிப்பிட்டார்கள். அப்போது துரைமுருகன் (தி.மு.க.) எழுந்து துணை முதல்-அமைச்சரை ஜல்லிக்கட்டு நாயகன் என்று குறிப்பிடுகிறார்கள் அவர் இதற்கு முன்பு மாடு பிடித்திருக்கிறாரா? எங்களை அழைத்து சென்று அவர் மாடு பிடிப்பதை பார்க்க ஏற்பாடு செய்வாரா? என்று கேட்டார்.



அதைத் தொடர்ந்து வேறொரு கேள்விக்கு பதில் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், துணை முதல்-அமைச்சரை ஜல்லிக்கட்டு நாயகன் என்று அழைப்பது குறித்து எதிர்கட்சி துணைத் தலைவர் கேள்வி எழுப்பினார்.

ஜல்லிக்ககட்டு போராட்டத்தின் போது துணை முதல்-அமைச்சர் டெல்லி சென்று பிரதமரையும், அது தொடர்பான அதிகாரிகளையும் சந்தித்து 20 மணி நேரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெற்று தந்தார். அதனால்தான் அவரை ஜல்லிக்கட்டு நாயகன் என அழைக்கிறார்கள்.

அடுத்து விராலிமலையில் ஜல்லிக்கட்டு நடக்கும் போது எதிர்க்கட்சி துணை தலைவரை நாங்கள் அழைக்கிறோம். அவர் ஜல்லிக்கட்டை பார்க்கவோ, அல்லது மாடுபிடிக்கவோ தயாராக இருக்கிறாரா? என்பதை அறிய விரும்புகிறோம் என்றார்.

Tags:    

Similar News