செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

4-ம் ஆண்டு தொடக்கம்: முதல்-அமைச்சருக்கு எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்து

Published On 2020-02-17 07:43 GMT   |   Update On 2020-02-17 07:43 GMT
தமிழக சட்டசபைக்கு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்து வரவேற்றனர்.
சென்னை:

அ.தி.மு.க. அரசு இன்று 4-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி இன்று காலை 9.58 மணிக்கு சட்டசபைக்கு வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்து வரவேற்றனர்.

அதே நேரத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் சட்டசபைக்குள் நுழைந்தார். எனவே தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர். இதனால் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் அரசுக்கு பாராட்டு தெரிவித்தது போல் அமைந்தது.

மேலும் கேள்வி நேரத்தின் போது பதில் அளித்த அமைச்சர்கள் தங்கள் பதில் உரையில் முதல்- அமைச்சருக்கு பாராட்டும் தெரிவித்தனர்.

சட்டசபையில் இன்று மறைந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பிரசாத், முன்னாள் எம்.எல்.ஏ. சாவித்திரி அம்மாள் மற்றும் அதிக அளவில் ரத்ததானம் செய்து விருது பெற்ற பி.ஏ.கே.பி. ராஜசேகர் ஆகியோர் மறைவுக்கு சட்டசபையில் இன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் அரசு பள்ளிகளை தரம் உயர்த்த அந்த பள்ளிகள் சார்பில் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற விதிமுறை நடைமுறையில் உள்ளது. இது பற்றி கேள்வி நேரத்தின் போது தங்கம் தென்னரசு (தி.மு.க.) கேள்வி எழுப்பினார். அப்போது கல்விக்காக கோடிக்கணக்கில் அரசு செலவழிப்பதை சுட்டிக்காட்டி, இவ்வளவு நிதியை செலவிடும் அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்படுவதற்கான சிறு தொகையையும் செலுத்தலாமே என்றார்.

அதற்கு பதில் அளித்த கல்வி அமைச்சர் செங்கோட்டையன் இதுபற்றி முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றார்.
Tags:    

Similar News