செய்திகள்
புதுவை சட்டசபையில் முதல்-மந்திரி நாராயணசாமி பேசிய போது எடுத்த படம்.

குடியுரிமை சட்டத்துக்கு எதிரான தீர்மானம் - புதுவை அரசு மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

Published On 2020-02-12 08:46 GMT   |   Update On 2020-02-12 08:46 GMT
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக புதுவை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய அரசின் மீது மத்தியஅரசு நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது.
புதுச்சேரி:

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக புதுவை சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரக்கூடாது என்று கவர்னர் கிரண்பேடி முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

அதையும் மீறி இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே இதுசம்பந்தமாக நேற்று கவர்னர் தலைமை செயலாளரை அழைத்து பேசியதாக கூறப்படுகிறது.

மத்திய அரசுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பதால் இது சம்பந்தமாக கவர்னர் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறு அறிக்கை அனுப்பினால் அதன் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் மத்திய அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதை சந்திக்க தயார் என்று ஏற்கனவே நாராயணசாமி அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News