செய்திகள்
மாநில தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் 6 கோடி வாக்காளர்கள் - தேர்தல் ஆணையம்

Published On 2019-12-17 16:37 GMT   |   Update On 2019-12-17 16:37 GMT
தமிழகம் முழுவதும் துணை வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியை தாண்டியுள்ளது என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.
சென்னை:

ஜனவரி மாதம் 25-ம் தேதி 10-வது தேசிய வாக்காளர் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் வாக்காளர் தினம் கொண்டாடப்பட உள்ளது.

‘வலுவான ஜனநாயகத்துக்கான வாக்காளர்களின் அறிவு’ என்ற கருத்தின் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான வாக்காளர் தினத்தை கடைப்பிடிக்க இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், துணை வாக்காளர்கள் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டார். 

அதன்படி, தமிழகத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியை தாண்டியது. இதில் 1.31 லட்சம் புதிய வாக்காளர்கள் துணை வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். தமிழகத்தில் ஆண் வாக்காளர்கள் 2.96 கோடி, பெண் வாக்காளர்கள் 3.03 கோடி, 5,924 பேர் மூன்றாம் பாலினத்தவரும் உள்ளனர் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News