என் மலர்
நீங்கள் தேடியது "Voters ID"
- கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த வாக்காளர் அடையாள அட்டைகள் எப்படி இங்கு வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
- கடலூர் புதுநகர் போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மஞ்சக்குப்பம் பில்லுக்கடை சந்து தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை அள்ளும் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று காலை குப்பை வாகனத்தை தூய்மை பணியாளர்கள் எடுத்துச்செல்ல முயன்றனர்.
அப்போது குப்பை எடுக்கும் வாகனத்தில் கட்டு கட்டாக வாக்காளர் அடையாள அட்டைகள் அதிக அளவில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் தேர்தல் வாக்கு பதிவின் போது வைக்கப்படும் மை, சீல் ஆகியவையும் கிடந்தது.
இதனைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கடலூர் தாசில்தார் மகேஷ் குப்பை அள்ளும் வாகனத்தில் இருந்த வாக்காளர் அடையாள அட்டைகளை சோதனை செய்த போது அனைத்து வாக்காளர் அடையாள அட்டைகளும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த வாக்காளர் அடையாள அட்டைகள் என்பது உறுதி செய்யப்பட்டது.
பின்னர் தாசில்தார் இதனை கைப்பற்றி கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த வாக்காளர் அடையாள அட்டைகள் எப்படி இங்கு வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் குப்பை வாகனத்தில் இருந்த வயர்களும் அறுக்கப்பட்டு இருந்தன. இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் மாநகராட்சி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- தற்போது, புதிய அட்டையை வினியோகிக்க ஒரு மாதத்துக்கு மேல் ஆகிறது.
- புதிய இணையதளத்தில் தகவல் தொழில்நுட்ப செயலி ஒன்றை தேர்தல் கமிஷன் அறிமுகம் செய்துள்ளது.
புதுடெல்லி:
புதிய வாக்காளர் அட்டையை வாக்காளர்களிடம் 15 நாட்களில் வினியோகிக்கும் வகையில் புதிய முறையை தேர்தல் கமிஷன் அறிமுகம் செய்துள்ளது. தற்போது, புதிய அட்டையை வினியோகிக்க ஒரு மாதத்துக்கு மேல் ஆகிறது. புதிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி, புதிதாக பதிவு செய்தாலோ அல்லது ஏற்கனவே உள்ள வாக்காளர்கள் தங்கள் விவரங்களை திருத்தம் செய்தாலோ அடுத்த 15 நாட்களுக்குள் அவர்களுக்கு புதிய வாக்காளர் அட்டை வினியோகிக்கப்படும்.
இதற்காக தனது புதிய இணையதளத்தில் தகவல் தொழில்நுட்ப செயலி ஒன்றை தேர்தல் கமிஷன் அறிமுகம் செய்துள்ளது.
வாக்காளர் அட்டை உருவாக்கப்பட்டதில் இருந்து தபால்துறை மூலம் வாக்காளர்களிடம் ஒப்படைக்கப்படும் வரையிலான ஒவ்வொரு கட்டம் குறித்தும் வாக்காளர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நீண்ட கால விசாவில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்களில் இந்திய வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மாநில போலீசின் உளவுப்பிரிவு நடத்திய சோதனையின் போது 12 பேரிடம் வாக்காளர் அடையாள அட்டையும், 11 பேரிடம் ரேசன் கார்டுகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக முழு விசாரணையை தொடங்கியுள்ள போலீஸ், நடவடிக்கையை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளது.
நீண்ட கால விசாவில் பாகிஸ்தானின் சிந்தி இந்துக்கள் இந்தியாவில் இருப்பது சட்டப்பூர்வமானது. ஆனால் அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் மற்றும் ரேஷன் கார்டுகள் வழங்கப்படுவது என்பது சட்டப்பூர்வமானது கிடையாது. எனவே, சட்டவிரோதமாக ஆவணங்களை வைத்திருப்பதை தடுக்க இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி டேராடூனில் 275 பாகிஸ்தானியர்கள் உள்ளதாகத் தெரிகிறது. #PakistanCitizens #DehradunPolice






