search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "election commmission"

    தமிழகத்தில் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 தொகுதிகளில் இடைத்தேர்தலை நடத்தக்கோரி திமுக தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் 28ம் தேதி விசாரிக்க உள்ளது. #LSPolls #TNByelection #DMK
    புதுடெல்லி:

    தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் 18-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. அத்துடன், காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. ஆனால், தேர்தல் வழக்குகளை காரணம் காட்டி அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.

    தற்போது இந்த மூன்று தொகுதிகள் தொடர்பான தேர்தல் வழக்குகள் முடிவுக்கு வந்துவிட்டதால், தேர்தலை நடத்த எந்த தடையும் இல்லை. இதையடுத்து 3 தொகுதிகளிலும், ஏப்ரல் 18ம் தேதி இடைத்தேர்தல் நடத்தக்கோரி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.



    திமுகவின் கோரிக்கையை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை வரும் 28-ம் தேதி (வியாழக்கிழமை) விசாரிப்பதாக தெரிவித்துள்ளது. 28-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது, 3 தொகுதிகளிலும் தேர்தல் நடத்த முடியுமா? என தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் கருத்து கேட்கும். தேர்தலை நடத்த சாத்தியம் இல்லை என்று தேர்தல் ஆணையம் கூறினால், அதற்கான காரணத்தை கேட்டு உச்ச நீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பிக்கும் என தெரிகிறது. #LSPolls #TNByelection #DMK
    பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தேசிய மற்றும் மாநில கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்துக்கு தேர்தல் கமி‌ஷன் ஏற்பாடு செய்துள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள 58 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. #ParliamentElection #ElectionCommission #AllPartyMeeting
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2019) ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.

    தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களை தயார்படுத்தி வருகின்றன. இதையடுத்து நாடு முழுவதும் எத்தனை கட்டங்களாக ஓட்டுப்பதிவை நடத்துவது என்று தலைமை தேர்தல் கமி‌ஷன் ஆய்வு செய்து வருகிறது.

    இதற்கிடையே பாராளுமன்றத் தேர்தலில் அதிக அளவு பெண்களை பங்கு பெற வைப்பது, கட்சிகள்- வேட்பாளர்களின் தேர்தல் பிரசார செலவை குறைத்து உச்சவரம்பை நிர்ணயம் செய்வது, இடம் பெயர்ந்த தொழிலாளர்களையும் வாக்களிக்க செய்வது உள்பட பல்வேறு வி‌ஷயங்களில் சீர்திருத்தங்கள் கொண்டு வர தலைமை தேர்தல் கமி ஷன் திட்டமிட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பு இருந்தால்தான் இந்த சீர்திருத்தங்களை அமல்படுத்த முடியும். எனவே அரசியல் கட்சிகளிடம் இதில் ஒருமித்த கருத்தை உருவாக்க தலைமை தேர்தல் கமி‌ஷன் முடிவு செய்துள்ளது.

    இதற்காக தேசிய மற்றும் மாநில கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்துக்கு தேர்தல் கமி‌ஷன் ஏற்பாடு செய்துள்ளது. இந்த கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகளும், 51 மாநில கட்சிகளும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை 27-ந்தேதி) இந்த கூட்டம் நடைபெற உள்ளது.

    கூட்டத்தில் மொத்தம் 8 வி‌ஷயங்கள் குறித்து அரசியல் கட்சிகளுடன் விவாதம் நடத்த தேர்தல் ஆணையர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். அதில் தேர்தலில் பெண்களை அதிக அளவில் பங்கு பெறச் செய்வது பற்றி விவாதிக்கப்பட உள்ளது. பாராளுமன்றத்துக்கு 1952-ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது 4.4 சதவீதம் பெண் வேட்பாளர்களே பங்கேற்றனர். அது 2014-ல் 11.9 சதவீதமாக உயர்ந்தது.

    2014-ம் ஆண்டு தேர்தலின் போது மொத்தம் களம் இறங்கிய 8251 வேட்பாளர்களில் 668 பேர்தான் பெண்களாக இருந்தனர். 2019-ம் ஆண்டு பாராமன்றத் தேர்தலில் வேட்பாளர்களாக களம் இறக்கப்படும் பெண்கள் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்த வேண்டும் என்று தேர்தல் கமி‌ஷன் விரும்புகிறது. பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 2009-ல் 55.82 இருந்தது. 2014-ல் அது 65.54 சதவீதமாக அதிகரித்தது.

    பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகமாக உயர்ந்து விட்டதால், அதற்கு ஏற்ப பெண் வேட்பாளர்கள் எண்ணிக்கையும் உயர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கருதுகிறது.

    பெண்களை அதிக அளவில் போட்டியிட செய்ய வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் 58 அரசியல் கட்சிகளிடமும் தேர்தல் ஆணையம் வலியுறுத்த உள்ளது. பெண் வேட்பாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய வேட்பாளர்கள் தேர்வில் இட ஒதுக்கீடு முறையை கொண்டு வரலாமா என்றும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. சுவீடன், அர்ஜெண்டினா, நேபாளம், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ருவாண்டா, பொலிவியா ஆகிய நாடுகளில் பெண் வேட்பாளர்களுக்கு சட்ட ரீதியான இட ஒதுக்கீடு உள்ளது.

    அர்ஜெண்டினா, வங்க தேசம், பொலிவியா, மெக்சிகோ, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் பெண்கள் தேர்தலில் போட்டியிட எத்தனை சதவீதம் இடம் வழங்க வேண்டும் என்று தனி சட்டமே உள்ளது. அது போன்று உரிய இட ஒதுக்கீடு முறையை பெண்களுக்காக இந்தியாவிலும் கொண்டு வரலாமா? என்றும் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

    அடுத்து தேர்தல் செலவை குறைப்பது பற்றியும் ஆலோசிக்கப்பட உள்ளது. கடந்த சில தேர்தல்களில் வேட்பாளர்கள் செய்யும் செலவு பல மடங்கு அதிகரித்து விட்டது. இது தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே கட்சிகளும், வேட்பாளர்களும் தேர்தல் செலவை குறைக்க வேண்டும் என்பதில் தலைமை தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது.

    தேர்தலில் செலவு செய்ய அங்கீகரிக்கப்பட்ட தேசிய அரசியல் கட்சிகளுக்கும், மாநில கட்சிகளுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை உச்ச வரம்பாக நிர்ணயிக்க தேர்தல் ஆணையம் விரும்புகிறது. இதன் மூலம் வேட்பாளர்கள் தங்களது கருப்புப் பணத்தை தண்ணீராக செலவு செய்வதில் இருந்து தடுத்து நிறுத்த முடியும் என்று கருதுகிறது.

    ஆனால் செலவு உச்சவரம்பை கட்சிகள் ஏற்குமா? என்பது சந்தேகமாக உள்ளது.


    தேர்தலின்போது அனைவரையும் வாக்களிக்க செய்ய வேண்டும் என்பதை தேர்தல் கமி‌ஷன் ஒரு பிரசாரம் போல செய்து வருகிறது. அதன் பலனாக வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. என்றாலும் பிழைப்புக்காக மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் தொழிலாளர்களை வாக்களிக்க செய்ய முடியாத நிலை உள்ளது. அத்தகைய தொழிலாளர்களையும் வாக்களிக்க செய்ய ஏதாவது மாற்று வழியை கொண்டு வர வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையம் தீவிரமாக உள்ளது.

    தபால் ஓட்டு, இ-வோட்டிங் முறைகளை பயன்படுத்தி வேறு ஊர்களில் உள்ளவர்களையும் வாக்களிக்க செய்வது பற்றியும் திங்கட்கிழமை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இடம் பெயர்ந்த தொழிலாளர்களையும் வாக்களிக்க செய்ய 5 நவீன திட்டங்களை தேர்தல் ஆணையம் உருவாக்கி இருக்கிறது. அவை பற்றி ஆலோசனை கூட்டத்தில் விவாதித்து முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

    வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்து வாக்களிக்க வைப்பது, இடம் மாறிய தொழிலாளர்களுக்கு ஹெல்ப்-லைன் உருவாக்கும் திட்டங்களை தேர்தல் ஆணையம் வைத்துள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சகங்களிடமும் தேர்தல் ஆணையம் கருத்து கேட்டுள்ளது.

    ஓட்டுப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பு மக்கள் மத்தியில் அமைதியான சூழ்நிலையை எப்படி உருவாக்குவது என்பது பற்றியும் கூட்டத்தில் பேசப்பட உள்ளது. கட்சி நிர்வாகிகள் வீடு, வீடாக செல்வதை தவிர்க்க கட்சிகளிடம் தேர்தல் ஆணையம் வலியுறுத்த உள்ளது. இது தவிர கடைசி 48 மணி நேரத்தில் நடக்கும் ஆன்லைன் பிரசாரம் பற்றியும் ஆலோசிக்க திட்டமிட்டுள்ளது.

    சமூக வலைதளங்களை தேர்தல் பிரசாரத்துக்கு எந்த அளவுக்கு பயன்படுத்தலாம் என்றும் விவாதம் நடத்தப்பட உள்ளது. 2014-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க. வெற்றிக்கு சமூக வலைதளங்கள் மிகவும் உதவியாக இருந்தன. அதில் கூடுதல் கட்டுப்பாடுகள் கொண்டு வர காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியபடி உள்ளன.

    எனவே சமூக வலைத்தள பிரசாரத்தை எப்படி கையாள்வது என்று கூட்டத்தில் விவாதிக்க உள்ளனர். தேர்தல் தொடர்பான தகவல்கள் வெளியிட அரசியலமைப்பு பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 126(1) (பி)படி அச்சு ஊடகங்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தெடர்பான தகவல்களை அச்சு ஊடகங்களும் 48 மணி நேரத்துக்கு முன்பே நிறுத்தி விடுவது பற்றியும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதம் நடத்தப்பட உள்ளது.

    தமிழ்நாட்டில் இருந்து அ.தி.மு.க., தி.மு.க. இரு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளன. கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை 2019-ம் ஆண்டு தேர்தலில் அமல்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. #ParliamentElection #ElectionCommission #AllPartyMeeting
    ×