என் மலர்
நீங்கள் தேடியது "Garbage truck"
- கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த வாக்காளர் அடையாள அட்டைகள் எப்படி இங்கு வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
- கடலூர் புதுநகர் போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மஞ்சக்குப்பம் பில்லுக்கடை சந்து தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை அள்ளும் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று காலை குப்பை வாகனத்தை தூய்மை பணியாளர்கள் எடுத்துச்செல்ல முயன்றனர்.
அப்போது குப்பை எடுக்கும் வாகனத்தில் கட்டு கட்டாக வாக்காளர் அடையாள அட்டைகள் அதிக அளவில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் தேர்தல் வாக்கு பதிவின் போது வைக்கப்படும் மை, சீல் ஆகியவையும் கிடந்தது.
இதனைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கடலூர் தாசில்தார் மகேஷ் குப்பை அள்ளும் வாகனத்தில் இருந்த வாக்காளர் அடையாள அட்டைகளை சோதனை செய்த போது அனைத்து வாக்காளர் அடையாள அட்டைகளும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த வாக்காளர் அடையாள அட்டைகள் என்பது உறுதி செய்யப்பட்டது.
பின்னர் தாசில்தார் இதனை கைப்பற்றி கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த வாக்காளர் அடையாள அட்டைகள் எப்படி இங்கு வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் குப்பை வாகனத்தில் இருந்த வயர்களும் அறுக்கப்பட்டு இருந்தன. இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் மாநகராட்சி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- பிணமாக கிடந்த பெண்ணுக்கு 30 முதல் 35 வயதுக்குள் இருக்கும் என்பது தெரியவந்தது.
- கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றியும் போலீசார் ஆய்வு நடத்தினார்கள்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு ஸ்கேட்டிங் மைதானத்திற்கு முன்பாக மாநகராட்சியின் குப்பை லாரியை நிறுத்துவது வழக்கம். அதேபோல சம்பவத்தன்று இரவும் குப்பை லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் சென்று விட்டார். அதிகாலையில் ஒரு நபர் குப்பையை போடுவதற்காக அங்கு வந்தார். அப்போது குப்பை லாரியின் பின்புற பகுதியில் ஒரு சாக்கு மூட்டையில் ஒரு பெண்ணின் தலை தெரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி உடனடியாக அவர் சி.கே.அச்சுக்கட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து குப்பை லாரியில் கிடந்த சாக்கு மூட்டையை பிரித்து பார்த்த போது, ஒரு பெண்ணை கொன்று, அவரது கை, கால் கட்டப்பட்டு, உடல் சாக்கு மூட்டைக்குள் திணித்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு தடய அறிவியல் நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
சம்பவம் பற்றி தெரிய வந்ததும் உயர் போலீஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். அப்போது பிணமாக கிடந்த பெண்ணுக்கு 30 முதல் 35 வயதுக்குள் இருக்கும் என்பது தெரியவந்தது. ஆனால் அவர் யார்?, எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது உடனடியாக தெரியவில்லை. அவரது உடலில் எந்த காயங்களும் இல்லை. இதனால் அந்த பெண் கழுத்தை நெரித்தோ அல்லது மூச்சை திணறடித்தோ கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்பது போலீசாருக்கு தெரியவந்தது.
அந்த பெண் ஒரு தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான டி-சர்ட், பேண்ட் அணிந்திருந்தார். அவர் அணிந்திருந்த டி-சர்ட்டில் இருந்த நிறுவனத்தின் பெயர் மூலமாக போலீசார் விசாரித்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றியும் போலீசார் ஆய்வு நடத்தினார்கள்.
அப்போது கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த பெண் உளிமாவு அருகே வசித்து வந்த புஷ்பா என்ற ஆஷா என்பது தெரியவந்தது. மேலும் அவர் வேறு மதத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்ததும் தெரியவந்தது.
மேலும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டு குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட இளம்பெண் புஷ்பா பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இவரை வேறு இடத்தில் கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் திணித்து குப்பை லாரியில் வீசி சென்று இருப்பது தெரிய வந்தது.
எனவே இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலை செய்யப்பட்ட புஷ்பாவின் கணவரிடமும் விசாரணை நடத்த போலீசார் தேடி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் கைப்பற்றி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நகர மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்
- ரூ.14.60 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்டது
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து தெருக்களுக்கும் துப்புரவு பணியாளர்கள் வீடு, வீடாக வானங்களில் சென்று குப்பைகளை சேகரிக்கின்றனர்.
இந்த நிலையில் துப்புர பணியாளர்கள் குப்பைகளை விரைந்து சேகரிக்க, 15-வது மானிய நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.14.60 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக 2 வாகனங்கள் வாங்கப்பட்டது. இந்த வாகனங்களை நகர மன்ற தலைவர் எம். காவியாவிக்டர் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
அப்போது நகராட்சி ஆணையர் ஜி. பழனி, நகர செயலாளர் ம. அன்பழகன், நகராட்சி பொறியாளர் சங்கர் உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள் உடன் இருந்தனர்.
பல்லாவரத்தை அடுத்த பம்மல் நகராட்சியில் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்கப்படுகிறது. நேற்று இரவு 10 மணி அளவில் பம்மல் நகராட்சிக்கு சொந்தமான 3 குப்பை லாரிகள் திருநீர் மலை பேரூராட்சிக்குட்பட்ட ஏரி பகுதிக்கு வந்தன. பின்னர் அதில் இருந்த குப்பைகளை அங்கு கொட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இதை அறிந்ததும் அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏரியில் குப்பையை கொட்டக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து 3 லாரிகளையும் சிறைபிடித்தனர். பின்னர் அவை திருநீர் மலை பேரூராட்சி அலுவலகத்துக்கு கொண்டு சென்று நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் நேற்று இரவு அங்கு பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews






