செய்திகள்
கண்ணில் கருப்பு துணி கட்டி மாணவர்கள் போராட்டம் செய்த காட்சி.

திருவண்ணாமலையில் 5, 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வை கண்டித்து திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்

Published On 2019-09-19 11:48 GMT   |   Update On 2019-09-19 11:48 GMT
5, 8-ம் வகுப்பு பொதுத் தேர்வை கண்டித்து திருவண்ணாமலையில் தி.மு.க. மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திருவண்ணாமலை:

தமிழகத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனை கண்டித்து திருவண்ணாமலை அண்ணாசிலை அருகே தி.மு.க. மாணவர் அணியினர் இன்று காலை ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் எ.வே. கம்பன், மாணவரணி அமைப்பாளர்கள் ரவி அம்பேத்குமார் எம்.எல்.ஏ., நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன் முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன் மற்றும் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

5, 8-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தினால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு தள்ளப்படுவார்கள். இது கல்வி இடைநிற்றலுக்கு வழி வகுக்கும். எனவே தமிழக பள்ளிக்கல்வித்துறை 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர்.

Tags:    

Similar News