செய்திகள்
பரிசு பெட்டகம் சின்னம்

வேலூர் தொகுதி - சுயேச்சை வேட்பாளருக்கு பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கீடு

Published On 2019-07-25 03:54 GMT   |   Update On 2019-07-25 03:54 GMT
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளருக்கு பரிசு பெட்டகம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
வேலூர்:

தமிழகத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றது. இதில் வேலூர் தொகுதி தவிர அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. காட்பாடியில் ரூ.11 கோடி கைப்பற்றப்பட்டதை அடுத்து வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் அடுத்த மாதம் 5-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டது. 



இதற்கிடையே, வேலூர் தொகுதியில் 28 பேர் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் டி.எம். கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்ளிட்ட 28 பேர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், வேலூர் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் சுகுமாருக்கு பரிசு பெட்டகம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

அமமுக இந்த தேர்தலில் போட்டியிடாத நிலையில் சுயேச்சை வேட்பாளருக்கு இந்த சின்னத்தை ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News