செய்திகள்
போராட்டம் (கோப்பு படம்)

ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக தடையை மீறி போராட்டம் நடத்திய 25 பேர் மீது வழக்கு

Published On 2019-07-04 12:24 GMT   |   Update On 2019-07-04 12:24 GMT
டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 25 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கும்பகோணம்:

டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட கோரி காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நடந்த இந்த போராட்டத்தில் விவசாய சங்கத்தினர், மற்றும் அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

இதேபோல் கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலை, சோழபுரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தடை செய்ய வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

சுவாமிமலை தேரடி அருகில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்திற்கு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் சின்னதுரை தலைமை வகித்தார். இதே போல், சோழபுரத்தில் காவிரி உரிமை மீட்பு குழு மற்றும் விடுதலை தமிழ் புலிகள் கட்சி சார்பில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்திற்கு கட்சியின் தலைவர் குடந்தை அரசன் தலைமை வகித்தார்.

இந்நிலையில் அனுமதியின்றி காத்திருப்பு போராட்டம் செய்ததாக காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் சின்னதுரை, விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன் உள்பட 25 பேர் மீது தடையை மீறி போராட்டம் செய்ததாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News