செய்திகள்

பல்லடத்தில் இருந்து அவினாசி வழியாக கோவைக்கு பஸ் இயக்க வலியுறுத்தல்

Published On 2019-06-19 11:11 GMT   |   Update On 2019-06-19 11:11 GMT
பல்லடத்தில் இருந்து அவினாசி வழியாக கோவைக்கு பஸ் இயக்க வலியுறுத்தி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பல்லடம்:

பல்லடம் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரமாகும். திருப்பூர் மாவட்டத்தின் பெரிய சட்டமன்றத் தொகுதியான இதில் 3,62500 வாக்காளர்கள் உள்ளனர். பல்லடம் நகர பகுதியில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற் பட்டமக்கள் வசிக்கின்றனர்.

பல்வேறு வசதிகள் இருந்தும் மருத்துவம், மேல்நிலைக் கல்வி போன்றவைக்கு கோவை செல்ல வேண்டி உள்ளது. பல்லடம் வழியாக தினமும் சுமார் 200-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் கோவை செல்கின்றன. இவைகள் சூலூர், சிங்காநல்லூர், ராமநாதபுரம் வழியாக காந்திபுரம் செல்கின்றன.

ஆனால் பெரும்பாலான ஆஸ்பத்திரிகள், கல்லூரிகள் அவிநாசி சாலையில் உள்ளது. இங்கு செல்வதற்கு பல்லடம் மக்கள் காந்திபுரம் சென்று மீண்டும் அங்கிருந்து நகரப்பேருந்து பிடித்து அவினாசி சாலை வழியாக சென்று செல்லவேண்டியுள்ளது.

இதனால் கடும் அலைச்சல் மற்றும் கால விரையம் ஏற்படுகிறது . எனவே பல்லடத்திலிருந்து கோவை செல்ல அவிநாசி சாலை வழியாகவும் பேருந்துகளை இயக்கினால் பல்லடம் மக்களுக்கு கடும் அலைச்சல் மற்றும் கால விரையம் இவற்றிலிருந்து விடுதலை கிடைக்கும்.

உதாரணமாக பல்லடத்திலிருந்து மங்களம் கருமத்தம்பட்டி வழியாகவும், பல்லடத்திலிருந்து சூலூர், முத்து கவுண்டம்பாளையம் வழியாகவும், பல்லடம் காரணம்பேட்டை வழி கருமத்தம்பட்டி வழியாகவும், அவிநாசி சாலை வழியாக கோவைக்குபஸ்களை இயக்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் பல்லடம் பகுதியில் இருந்து கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கும் மருத்துவ வசதிக்கு செல்லும் பொதுமக்களுக்கும் பேரூதவியாக இருக்கும் என பல்லடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News