செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் மழைக்கு வாய்ப்பு

Published On 2019-06-05 03:42 GMT   |   Update On 2019-06-05 03:42 GMT
வெப்ப சலனம் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

தமிழகத்தில் அனல் காற்று வீசுவதற்கான வாய்ப்பு குறைந்து உள்ளது. அதே வேளையில் உள் மாவட்டங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இயல்பை விட அதிகமாக பதிவாகலாம். கரூர், திருச்சி, சேலம், பெரம்பலூர், திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பம் அதிகமாக பதிவாக கூடும்.

வெப்ப சலனம் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு (இன்றும், நாளையும்) தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உண்டு. பெரும்பாலும் தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்குவதற்கு சாதகமான சூழல் இன்னும் ஏற்படவில்லை. 6-ந் தேதிக்கு (நாளை) பிறகு தான் தென்மேற்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News