செய்திகள்

காங்கிரஸ் கேட்கும் 10 தொகுதிகள்

Published On 2019-02-21 10:39 GMT   |   Update On 2019-02-21 10:39 GMT
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளை பெறுவதில் காங்கிரஸ் தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். #Congress
சென்னை:

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த தொகுதி உடன்பாடு முழு திருப்தி அளிப்பதாக காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளை பெறுவதில் காங்கிரஸ் தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் கன்னியாகுமரி, விருதுநகர், தேனி, ராமநாதபுரம், ஈரோடு, திருவள்ளூர், சிவகங்கை, ஆரணி, சேலம், புதுச்சேரி ஆகிய தொகுதிகளை ஒதுக்குமாறு காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.

இந்த தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும் பட்சத்தில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வருமாறு:-

1. கன்னியாகுமரி- செயல் தலைவர் எச்.வசந்தகுமார் அல்லது ரூபி மனோகரன்.

2. விருதுநகர்- முன்னாள் எம்.பி. மாணிக் தாகூர்.

3. தேனி- முன்னாள் எம்.பி. ஜே.எம்.ஆரூண்.

4. ராமநாதபுரம்- திருநாவுக்கரசர் (முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர்).

5. ஈரோடு- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் (முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர்).

6. திருவள்ளூர்- செயல் தலைவர் நாமக்கல் ஜெயக்குமார் அல்லது முன்னாள் வேட்பாளர் விக்டரி ஜெயக்குமார்.

7. சிவகங்கை- கார்த்தி சிதம்பரம்.

8. ஆரணி- செயல் தலைவர் விஷ்ணு பிரசாத்.

9. சேலம்- கே.வி.தங்கபாலு (முன்னாள் காங்கிரஸ தலைவர்).

10. புதுச்சேரி- சபாநாயகர் வைத்திலிங்கம் அல்லது காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஏ.கே.டி. ஆறுமுகம். #Congress
Tags:    

Similar News