செய்திகள்

வங்கியில் கடன் பெறுவதில் சட்டத்திருத்தம் தேவை - மத்திய அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்

Published On 2018-12-31 10:34 GMT   |   Update On 2018-12-31 10:34 GMT
வங்கியில் கடன் பெறுவது தொடர்பாக சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என மத்திய அரசுக்கு ஐகோர்ட் பரிந்துரை செய்துள்ளது. #BankLoan #HighCourt #LoanDebt
சென்னை:

புதுக்கோட்டை மாவட்டம் நிலையூர் அங்கன்வாடி மையத்தில் ஊழியராக வேலை பார்ப்பவர் மங்கலம். இவர் அரசிடம் அனுமதி பெறாமல் வெளிநாடு சென்று வந்ததாக கூறி பணிநீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து மங்கலம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதன் மீதான விசாரணை நடந்து வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் கடன் பெறுவது தொடர்பாக சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், கடன் பெறுவோர் வங்கிகளில் பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்கும் வகையில் விதிகளைத் திருத்த வேண்டும். கடனை திருப்பி செலுத்தும்வரை பாஸ்போர்ட் ஒப்படைக்க முடியாது எனவும், கடனை திருப்பி செலுத்தாவிட்டால் பாஸ்போர்ட்டை தற்காலிகமாக ரத்துசெய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். #BankLoan #HighCourt #LoanDebt
Tags:    

Similar News