செய்திகள்

முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை - 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Published On 2018-10-21 02:37 GMT   |   Update On 2018-10-21 02:37 GMT
வைகை அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் மதுரை, தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #FloodAlert
தேனி:

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி பகுதியில் பெய்த கனமழை காரணமாக, நேற்று மாலையில், வைகை அணையின் நீர்மட்டம்  68.50 அடியை எட்டியது. இதையடுத்து, சுற்றுவட்டாரத்தில் உள்ள மாவட்டங்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை  விடுக்கப்பட்டது.



இந்த நிலையில், அந்தப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம், இன்று காலை 5 மணி நிலவரப்படி 69 அடியை எட்டியது.

அணைக்கு தற்போது 3 ஆயிரத்து 865 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் ஏழு பிரதான மதகுகள் வழியாக வெளியேற்றப்படுகிறது. வைகை அணை நீர்மட்டம் 69 அடியை எட்டியதால், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. #FloodAlert
Tags:    

Similar News