செய்திகள்

நான் மைக்குமார் அல்ல, மைக் டைசன்- தினகரனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி

Published On 2018-10-19 05:00 GMT   |   Update On 2018-10-19 05:00 GMT
தான் மைக்குமார் அல்ல, மைக்டைசன் என்று டி.டி.வி. தினகரனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார். #ADMK #TNMinister #Jayakumar #TTVDhinakaran
சென்னை:

சென்னை மூலக்கொத்தளத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. 47-ம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியில் அமைச்சர் டி.ஜெயக்குமார் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. ஆட்சி மக்களுக்காக பாடுபடுகின்ற ஆட்சியாகும். ஆனால் இந்த ஆட்சியை மு.க.ஸ்டாலின் குறை கூறுகிறார். முதல்- அமைச்சர் கனவில் மு.க. ஸ்டாலின் தூக்கம்இல்லாமல் தவிக்கிறார். 2019-ம் ஆண்டு பாராளுமன்றத்துக்கு மட்டுமே தேர்தல் வரும். தமிழக சட்டசபைக்கு தேர்தல் வராது.


என்னை ‘மைக்குமார்’ என்று டிடி.வி.தினகரன் கூறி இருக்கிறார். என்னை பொறுத்தவரை ‘மைக்’ முன்னாடி பேசுவது தவறா? தவறே கிடையாது.

ஆனால் அவருக்கு நான் சொல்லிக் கொள்கிறேன். நான் ‘மைக்குமார் அல்ல, மைக்டைசன்’

மைக்டைசன் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்கள் அல்லவா? அவர் மாதிரி நாங்க அடிச்சா ‘நாக் அவுட் தான்’ அந்த மாதிரி அடிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிருபர்கள் அவரிடம் ‘நீங்கள்தான் மைக்டைசனா? என்று கேட்டனர். அதற்கு அவர், நான் பாக்சிங் செய்வேன். வேண்டுமானால் மோதிப் பார்க்க வாருங்கள். இங்கேயே மேடை உள்ளது. நான் எப்படி நாக்அவுட் பண்ணுகிறேன், எப்படி பஞ்ச் செய்கிறேன் என்று நீங்கள் பாருங்கள். இப்போது கூட ‘பாக்சிங்’ செய்து உங்களை ஜெயிக்க முடியும்.

இவ்வாறு சிரித்தப்படி கூறி கலகலப்பை ஏற்படுத்தினார். #ADMK #TNMinister #Jayakumar #TTVDhinakaran

Tags:    

Similar News