செய்திகள்

சீருடை வழங்க வலியுறுத்தி கல்வித்துறை முன்பு ஆர்ப்பாட்டம்

Published On 2018-09-21 10:18 GMT   |   Update On 2018-09-21 10:18 GMT
அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், இளைஞர் பெருமன்றம் ஆகியவற்றின் சார்பில் கல்வித்துறை வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

புதுச்சேரி:

அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், இளைஞர் பெருமன்றம் ஆகியவற்றின் சார்பில் கல்வித்துறை வளாகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு இளைஞர் பெருமன்ற மாநில தலைவர் ராமராஜா தலைமை தாங்கினார். இளைஞர் பெருமன்ற துணை செயலாளர் லூதியர், துணைத்தலைவர்கள் பெருமாள், முரளி, பல்கலைக் கழக பொறுப்பாளர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில செயலாளர் அந்தோணி நோக்கவுரையாற்றினார். இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம், மாணவர் பெருமன்ற மாநில செயலாளர் எழிலன் மற்றும் இளைஞர், மாணவர் பெருமன்ற நிர்வாகிகள் பங்கேற்றனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி தொடங்கி 4 மாதமாக வழங்கப்படாத சீருடைகளை உடனடியாக வழங்க வேண்டும். கட்டண நிர்ணயக்குழு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிகமாக வசூலிக்கும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

Tags:    

Similar News